இனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு "டேட்டா ரோல்ஓவர்" சலுகை கிடையாது.! அதிரடி அறிவிப்பு.!

|

தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் அதன் டேட்டா ரோல்ஓவர் வசதியை கைவிட்டதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் வி-ஃபைபர் வாடிக்கையாளர்கள்

ஏர்டெல் வி-ஃபைபர் வாடிக்கையாளர்கள்

குறிப்பாக ஏர்டெல் வி-ஃபைபர் வாடிக்கையாளர்கள் தங்களது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத
டேட்டாவை இனிமேல் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் இந்த வசதியை ஏர்டெல் நிறுவனம் நீக்கியதாக தெரிகிறது.

 எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

மேலும் ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையை இப்போது எக்ஸ்ட்ரீம் ஃபைபர் என மறுபெயரிட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தகவல் ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் பக்கத்திலும் பிரதிபலிக்கிறது. அங்கே கொடுக்கப்பட்டடுள்ள தகவலின் அடிப்படையில் எந்தவொரு பிராட்பேண்ட் திட்டங்களின் கீழும், டேட்டா ரோல் ஓவர் செய்வதற்கான வசதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

டேட்டா ரோல்ஓவர் வசதி

டேட்டா ரோல்ஓவர் வசதி

அதாவது டேட்டா ரோல்ஓவர் வசதி என்பது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத டேட்டாவை தற்போது
பில்லிங் சுழற்சிக்கு அனுப்ப அனுமதிக்கும். ஆனால் இனிமேல் இது நிகழாது என்றும், குறிப்பிட்ட பிராட்பேண்ட் திட்டத்தின்டேட்டா நன்மை தீர்ந்தவுடன் கூடுதலாக எந்தவொரு டேட்டா நன்மையும் அனுபவிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

ரூ.299 + வரி

ரூ.299 + வரி

இந்த டேட்டா ரோல் ஓவர் கைவிடப்பட்டாலும், ஏர்டெல் நிறுவனம் சத்திமில்லாமல் Get unlimited data எனும் விருப்பத்தை அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் இணைத்துள்ளது. அதாவது வரம்பற்ற டேட்டா அணுகலுக்காக இந்நிறுவனம் தனது பயனர்களிடமிருந்து ரூ.299 + வரி என்கிற கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த ரூ.299 என்பது உங்கள் அடிப்படை திட்டத்துடன் சேரத்து நீங்கள் கொடுக்கவேண்டிய தொகை ஆகும்.

வரம்பற்ற டேட்டா கிடைக்கும்

வரம்பற்ற டேட்டா கிடைக்கும்

உதரணமாக நீங்கள் தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் பேசிக் பிராட்பேண்ட் திட்டமான ரூ.799-ஐ தேர்வு செய்தால், ஒருபில்லிங் சுழற்சிக்கு நீங்கள் 150ஜிபி அளவிலான டேட்டாவை பெறமுடியும். ஒருவேளை உங்களுக்கு கூடுதல் டேட்டாதேவைப்படும் என்றால் உங்களின் பேசிக் திட்டத்திற்கு மேல் ரூ.299-ஐ கொடுத்து ரீசார்ஜ் செய்தால் உங்களுக்குவரம்பற்ற டேட்டா கிடைக்கும். இதற்குவேண்டி நீங்கள் மொத்தம் ரூ.1098+ வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்.

வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

 4பிராட்பேண்ட் திட்டங்கள்

4பிராட்பேண்ட் திட்டங்கள்

இப்போது ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள 4பிராட்பேண்ட் திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.

திட்டம்-1
பேஸிக் திட்டம-ரூ.799
வரம்பற்ற அழைப்புகள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகலுடன் ஒரு மாதத்திற்கு 150 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

திட்டம்-2
எண்டர்டெயின்மெண்ட் திட்டம்- ரூ.999
வரம்பற்ற அழைப்புகள்,ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் ஜீ 5 ப்ரீமியம் ஆகியவற்றுடன் 300 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்,நெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

திட்டம்-3
ஏர்டெல் ப்ரீமியம் -ரூ.1499
வரம்பற்ற அழைப்புகள், 500 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது. அமேசான் ப்ரைம், நெட்ஃப்லிக்ஸ், ஜீ 5 ப்ரீமியம் மற்றும்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

திட்டம்-4
விஐபி திட்டம்-ரூ.3999
வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற டேட்டா கிடைக்கும்,அமேசான் ப்ரைம், நெட்ஃப்லிக்ஸ், ஜீ 5 பிரீமியம் போன்றவற்றைபயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Airtel discontinues data rollover facility for broadband users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X