Airtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்!

|

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) சமீபத்தில் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, நாட்டின் சிறந்த டிடிஎச் ஆபரேட்டர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நான்கு பே டிவி சேனல்களை ஃப்ரீ டு ஏர் (FTA) சேனல்களாக மாற்றியுள்ளது. இதன்படி டாடா ஸ்கை , ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் வாடிக்கையாளர்கள் இந்த கட்டண சேனல்கலை இலவசமாக பயன்படுத்தலாம்.

 நான்கு பே டிவி சேனல் இனி எஃப்.டி.ஏ

நான்கு பே டிவி சேனல் இனி எஃப்.டி.ஏ

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இக்காலத்தில் சந்தாதாரர்களை மகிழ்விக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டி.டி.எச் சேவை வழங்குநர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு பே டிவி சேனல்களை எஃப்.டி.ஏ பேக்காக மாற்றியுள்ளது.

நான்கு கட்டண சேனல் இலவசம்

நான்கு கட்டண சேனல் இலவசம்

கலர்ஸ் ரிஷ்டே (Colors Rishtey), ஜீ அன்மோல் (Zee Anmol), சோனி பால் (Sony Pal) மற்றும் ஸ்டார் உட்சவ் (Star Utsav) ஆகிய நான்கு கட்டண தொலைக்காட்சி சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இப்பொழுது இலவச சேனல்களாக அறிவித்துள்ளது. இந்த நான்கு கட்டண சேனல்களும் அதிக அளவில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அடுத்த 2 மாதத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதாவது, மே மாதம் 31ம் தத்தி வரை இலவசமாக மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.

இம்முறை சன் டைரக்ட் முதல் இடம்

இம்முறை சன் டைரக்ட் முதல் இடம்

புதிய மாற்றங்களைச் செயல்படுத்தும்போது டாடா ஸ்கை எப்போதும் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து எப்போதும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி களத்தில் இறங்கும். இருப்பினும், இந்த நேரத்தில், சன் டைரக்ட் தான் முதலில் நான்கு கட்டண சேனல்களை ஃப்ரீ டு ஏர் சேனலாக மாற்றியுள்ளது, அதைத் தொடர்ந்து மற்ற டி.டி.எச் ஆபரேட்டர்கள் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் மே 31 வரை

ஏப்ரல் 1 முதல் மே 31 வரை

துரதிர்ஷ்டவசமாக, டிஷ் டிவி மற்றும் டி 2 எச் இன்னும் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தவில்லை, ஆனால் இந்த வார இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். நான்கு கட்டண தொலைக்காட்சி சேனல்கள் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை இலவசமாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பே டிவி சேனல்களின் விலை

நான்கு பே டிவி சேனல்களின் விலை

நான்கு பே டிவி சேனல்களின் விலைகளைப் பொறுத்தவரை, சோனி பால், ஸ்டார் உட்சவ் மற்றும் கலர்ஸ் ரிஷ்டே ஆகியவையின் கட்டணம் மாதத்திற்கு ரூ.1 ஆக இருந்தது, அதேபோல், ஜீ அன்மோலின் விலை வெறும் 0.10 பைசா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலையை வைத்தே இவை அனைத்தும் பிரீமியம் சேனல்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Digital TV, Tata Sky and Sun Direct Offers 4 Pay Tv Channels Free Till May End : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X