மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.! இந்த முறை சேனல்.!

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது டிஜிட்டல் டிவி பயனர்கள் முதல் முறையாக கியூரியாசிட்டி ஸ்ட்ரீமில் இருந்து பிரீமியம் கன்டென்டை பெறுவதாக அறிவித்துள்ளது.

கியூரியாசிட்டிஸ்ட்ரீம்

கியூரியாசிட்டிஸ்ட்ரீம்

அதாவது கியூரியாசிட்டிஸ்ட்ரீம் என்பது ஆவணப்படங்கள் மற்றும் தொடர்கள் நிறைந்த ஒரு தளமாகும். இந்த அறிவிப்புகண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

நவம்பரில் தொடங்கிய

மேலும் இந்த அறிவிபபு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஏர்டெல் மற்றும் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் இடையேயான கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றுதான் கூறவேண்டும்.

Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?

கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி

வெளிவந்த தகவலின் அடிப்படையில் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனல் ஏர்டெல்லுக்கு பிரத்யேகமாக இருக்கும், குறிப்பாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு எந்தவிதமான கூடுதல செலவும் இல்லாமல் இலவசமாக கிடைடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர், கலை, பயணம்,

இந்த கியூரியாசிட்டிஸ்ட்ரீம் பொறுத்தவரை பார்வையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர், கலை, பயணம், கட்டிடக்கலை, வரலாறு போன்ற பலவற்றை உள்ளடக்கிய புதிய விடயங்களை கண்டறிய உதவுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்-ன்

மேலும் இந்த சேனல் ஆனது ஸ்டீபன் ஹாக்கிங்-ன் ஃபேவரிட் பிளேஸஸ் மற்றும் பிக் கேட்ஸ் ஏஸ் போன்ற பிரபலமானதலைப்புகளை உள்ளடக்கிய கியூரியாசிட்டிஸ்ட்ரீமின் முழுமையான லைப்ரரியுடன் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடந்து கியூரியாசிட்டிஸ்ட்ரீம்

இந்த ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் 16.5மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இந்த அணுக கிடைக்கும் எனவும்,அவர்கள் தங்கள் செட்-டாப் பாக்ஸில் சேனல் நம்பர் 419 வழியாக இந்த இலவச சேனலை பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கியூரியாசிட்டிஸ்ட்ரீம் முதன்முதலில் ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் இணையதளத்தில் தொடங்கப்பட்டது.எனவே அந்த இரண்டு தளங்களிலும் கியூரியாசிட்டிஸ்ட்ரீமிற்கு கிடைத்த வரவேற்பை தொடந்து கியூரியாசிட்டிஸ்ட்ரீம் சேவைமற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் வழியாக தங்கள் கூட்டை வலுப்படுததியுள்ளன.

கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி

இப்போது இலவசமாக கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனலில் கிடைக்கும் சில தலைப்புகளில் 'பிரேக்த்ரூ' எனும் கொரோனா வைரஸ் பற்றிய தொடர், பட்டர்ஃபிளை எபெக்ட், காந்தி-தி ஃபோர்ஸ் ஆஃப் வில்பவர்இ டேவிட் அட்டன்பரோவின் லைட் ஆன் எர்த் மற்றும் ஆசியா'ஸ் மோனார்கீஸ்
பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 டிஸ்கவரி சேனலின் நிறுவனர் ஜான் எஸ்.

இந்த கியூரியாசிட்டிஸ்ட்ரீம் எனப்படுவது டிஸ்கவரி சேனலின் நிறுவனர் ஜான் எஸ். ஹென்ட்ரிக்ஸ் தொடங்கிய ஸ்ட்ரீமிங் சேவை ஆகும். இது முதன்முதலில் கடந்த 2015-ம் ஆண்டு பிரத்யேக புனைகதை மற்றும் ஒரிஜினல் கன்டென்ட் ஸ்ட்ரீமிங் தளமாக வெளியானது என்பது தான் உண்மை.

80 மில்லியனுக்கும்

அன்மையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏர்டெல்லின் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் பேக் செல்லுபடி காலத்தை தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் நீட்டிப்பு செய்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உத்தரவுப்படி, வரும் ஏப்ரல் 17, 2020 வரை இந்த நீட்டிப்பு செல்லுபடியாகும்.

ஏர்டெல் நிறுவனத்தின்

அதுமட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்கம்மிங் அழைப்பு வசதியுடன், தனது 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 மதிப்பிலான ரீசார்ஜ் வழங்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் பயனர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி தங்கள் சேவையை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் மீண்டும் ஏர்டெல் நிறுவனம் இந்த கியூரியாசிட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Airtel Digital TV Launches CuriosityStream Channel, Available for Free: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X