ஏர்டெல் டிஜிட்டல் டிவி: திடீரென விலைகுறைப்பு-காரணம் இதுதான்.!

|

இந்தியாவில் தொடர்ந்து டி.டி.எச் ஆப்ரேட்டர்கள் தங்கள் செட்-டாப் பாக்ஸ்களின் விலையை குறைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக டிராய் கொண்டுவந்த பல்வேறு விதிமுறைகளுக்குப் பிறகு தான் இதுபோன்ற விலைகுறைப்பை அறிவித்துள்ளனர் டி.டி.எச் ஆப்ரேட்டர்கள்.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி

ஏர்டெல் டிஜிட்டல் டிவி

அன்மையில் டாடா ஸ்கை மற்றும் டிஷ் டிவி ஆனது, புதிய வாடிக்கையாளர்களுக்கான எச்டி எஸ்டிபிகளின் விலையை குறைத்தது, அதனை தொடர்ந்து இப்போது ஏர்டெல் டிஜிட்டல் டிவி இந்த பட்டியிலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.1,300-விலையில் வழங்கி வருகிறது

அதன்படி ஏர்டெல் டிஜிட்டல் டிவி இப்போது தனது எச்டி செட்-டாப் பாக்ஸை புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,300-விலையில் வழங்கி வருகிறது, அதே நேரத்தில் நீங்கள் ஒரு எஸ்டி செட்-டாப் பாக்ஸை ரூ.1,100-க்கு வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 4.2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், 455 நாள் வாலிடிட்டி-மிரட்டும் பிஎஸ்என்எல்.!தினமும் 4.2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், 455 நாள் வாலிடிட்டி-மிரட்டும் பிஎஸ்என்எல்.!

டாடா ஸ்கை நிறுவனம்

ஆனால் டாடா ஸ்கை நிறுவனம் எச்டி எஸ்டிபிக்கு நீங்கள் ரூ.1,499 என்கிற செலவையும் மற்றும் எஸ்டி எஸ்டிபிக்கு ரூ.1,399 என்கிற செலவையும் செய்ய வேண்டியிருக்கும். எனவே ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் விலை சற்று குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாக கொண்ட செட்-டாப் பாக்ஸை அறிமுகப்படுத்திய டிஷ் டிவி,அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு Dish NXT HD STB-ஐ ரூ.1,590-க்கு வழங்குகிறது. தற்சமயம் இந்தியாவில் நிலவும் செட்-டாப் பாக்ஸ்களின் இந்த விலைகுறைப்பு வாடிக்கையாளர் ஈர்க்கக்கூடியவகையில் உள்ளது. மேலும் சேனல் பேக்ஸ் வசதிகளிலும் பல்வேறு மாறுபாடுகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.

டிராய்

கடந்த வாரம் அடிப்படையில் டிஷ் டிவி ஆனது தனது முதல் இடத்தை இழந்ததாகவும், டாட்டா ஸ்கை நிறுவனம் ஆனது பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டத்தை அறிவித்து முதல் இடத்தை அடைந்துள்ளதாகவும்
டிராய் அமைப்பு கூறியுள்ளது. பின்பு இந்தியாவில் டாட்டா ஸ்கை நிறுவனம் முன்னணி டிடிஎச் ஆப்ரேட்டராக உள்ளது எனவும் டிராய் குறிப்பிட்டுள்ளது.

எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

 டிஜிட்டல் டிவி

மேலும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆனது அதன் புதிய வாடிக்கையாளர்கள் எச்டி பாக்ஸை ரூ.1,300-க்கும் எஸ்டி பாக்ஸை ரூ.1,100-க்கு வழங்குகிறது. பின்பு டிஷ்என்எக்ஸ் ரூ.1,590-க்கு வாங்க கிடைக்கும். பின்பு எஸ்.டி.பி. உடன் வாழ்நாள் உத்தரவாதத்தையும் அளிக்கிறது, இது மற்ற டி.டி.எச் ஆப்ரேட்டர்கள் வழங்காத ஒன்றாகும்.

டி.டி.எச் ஆப்ரேட்டரை அணுகி சரிபார்க்கும்படி

இருந்தபோதிலும் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள விலைகளின் இன்ஸ்டாலேஷன் கட்டணங்களும் உள்ளதா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. எனவே இணைப்பை முன்பதிவு செய்தபின் அந்தந்த டி.டி.எச் ஆப்ரேட்டரை அணுகி
சரிபார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Digital TV HD Set-Top Box Now Available at Rs 1,300 for New Customers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X