Airtel 'இப்படி' செய்திருக்க கூடாது! இனி 'இதை' செய்தால் அபராதம் நிச்சயம் - அதிரடி அறிவிப்பு!

|

ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச் சேவையான ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் கடுப்பை உருவாக்கலாம். வெகு வேகமாக இந்தியாவில் அபாரமாக வளர்ந்து வரும் இந்த டி.டி.எச் ஆபரேட்டர் தற்பொழுது 'அபராதம்' பற்றி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதற்கு இந்த அபராதம் என்று முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஏர்டெல் 'அபராதம்' பற்றி அதிரடி அறிவிப்பு

ஏர்டெல் 'அபராதம்' பற்றி அதிரடி அறிவிப்பு

ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் சில சேனல் பேக்குகளுக்கான சந்தாவை செலுத்தாமல் இடைவெளி விட்டுவிடுவார்கள், அப்படி சந்தாவை இடைவெளி விட்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சேவையை இனி ஏர்டெல் ‘இடைநிறுத்தமாக' எடுத்துக்கொள்ளும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இடைநிறுத்தமாகக் கருதப்பட்ட சந்தாவை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் கட்டாயம் அபராத தொகையைச் செலுத்த வேண்டும்.

மறுதொடக்கம் செய்ய இனி  ரிஸம்ஷன் சார்ஜஸ் கட்டாயம்

மறுதொடக்கம் செய்ய இனி ரிஸம்ஷன் சார்ஜஸ் கட்டாயம்

சரியாக சொன்னால், இடைநிறுத்தம் செய்யப்பட்ட குறிப்பிட்ட பேக்கிற்கான சந்தாவை நீங்கள் மீண்டும் ‘மறுதொடக்கம்' செய்ய விரும்பினால் மறுதொடக்க கட்டணம் எனப்படும் குறைந்த அபராத கட்டணத்தை நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். ஏர்டெல் நிறுவனம் இந்த அபராத தொகையை ரிஸம்ஷன் சார்ஜஸ் (Resumption charges) என்று தெரிவித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த புதிய அறிவிப்பு பற்றி விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

 இடைவேளை காலம் என்று ஏர்டெல் குறிப்பிடுவது இதை தான்

இடைவேளை காலம் என்று ஏர்டெல் குறிப்பிடுவது இதை தான்

ஏர்டெல் நிறுவனம் இடைவேளை காலம் என்று குறிப்பிடுவது, ஏர்டெல் டிவி சந்தாதாரர்கள் எந்த ஒரு திட்டத்தையும் வாங்காமல், பயன்படுத்தாமல் தங்களின் செட்-டாப் பாக்ஸை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தாமல் வெறுமனே விட்டுவைத்த நேரமாகும். ஏர்டெல்லின் அறிவிப்புப்படி இந்த பயனர்கள் தங்கள் சேவையை மீண்டும் தொடர திட்டத்திற்கு ஏற்ற மறுதொடக்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கு இது தான் அபராத கட்டணம்

இந்த திட்டங்களுக்கு இது தான் அபராத கட்டணம்

ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் My Sports, Economy, Infinity, Mega, Ultra, My Family, Jackpot, Magnum மற்றும் Internet TV போன்ற விலை உயர்ந்த பேக் வாடிக்கையாளர்கள் குறுகிய இடைவெளி காலம் விட்டு சேவையை மறுதொடக்கம் செய்ய விரும்பினால் மறுதொடக்க கட்டணமாக நீங்கள் கட்டாயம் ரூ.20 ரிஸம்ஷன் சார்ஜஸாக அபராதம் செலுத்திட வேண்டும். ஒருவேளை உங்களின் திட்டம் விலை குறைவானதாக இருந்தால் அதற்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?

குறைந்த விலை திட்டங்களுக்கு இது தான் அபராதம்

குறைந்த விலை திட்டங்களுக்கு இது தான் அபராதம்

உங்களின் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தா ரூ.350 அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கும் அடிப்படை திட்டங்களாக இருந்தால், குறிப்பிட்ட இடைவெளி காலத்திற்கு பின்பு மீண்டும் மறுதொடக்கம் செய்ய நீங்கள் கட்டாயம் ரூ.15 என்ற ரிஸம்ஷன் சார்ஜஸ்-ஐ செலுத்தியாக வேண்டும். இதுமட்டுமின்றி ஏர்டெல் மற்றொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதை நிச்சயம் ஏர்டெல் செய்திருக்கக் கூடாது தான்.

எதிர்பார்க்காத இன்னொரு அதிரடி அறிவிப்பு

எதிர்பார்க்காத இன்னொரு அதிரடி அறிவிப்பு

உங்களின் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாவை நீங்கள் சுமார் 720 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய ஏர்டெல் டிஜிட்டல் டிவி அக்கவுண்ட் செயலற்றதாகக் கருதப்பட்டு முடக்கம் செய்யப்படும். அதுமட்டுமின்றி அதில் இருக்கும் மீதமுள்ள பேலன்ஸ் மற்றும் உங்கள் அக்கவுண்ட் இருப்புகள் அனைத்தும் காலாவதியாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கம் செய்த பின் மீண்டும் சேவையை துவங்க ரூ.150 கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

புதிதாக செட்-டாப் பாக்ஸ் வாங்குவோர் கவனத்திற்கு

புதிதாக செட்-டாப் பாக்ஸ் வாங்குவோர் கவனத்திற்கு

புதிதாக ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் செட்-டாப் பாக்ஸ் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேவையின் கீழ் ரூ.1,100 க்கு சாதாரண எஸ்டி செட்-டாப் பாக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெறும் ரூ.200 கூடுதலாகச் செலுத்தினால் உங்களுக்கு உயர் தரம் கொண்ட எச்டி செட்-டாப் பாக்ஸ் வெறும் ரூ.1, 300 என்ற விலையில் கிடைக்கும்.

ஏர்டெல் தேங்க்ஸ் இருந்தால் சலுகை உண்டு

ஏர்டெல் தேங்க்ஸ் இருந்தால் சலுகை உண்டு

அதேபோல், ஏர்டெல் டிஜிட்டல் டிவி அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரீம் பாக்ஸையும் வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் Chromecast உடன் மிகவும் பிரபலமான OTT பயன்பாட்டுடன் ஸ்மார்ட் டிவி சாதனமாக வருகிறது. நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை வெறும் ரூ.3,999 என்ற விலையில் வாங்கலாம். ஒருவேளை நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் வாடிக்கையாளராக இருந்தால் சலுகையுடன் வெறும் ரூ.2,249 என்ற விலையில் சலுகையுடன் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Digital TV Customers Have To Pay Resumption Charges Of Rs.20 After Going On Break : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X