நீண்டநாள் பிளானில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி வெற்றி: கேஷ்பேக் ஆப்பருடன் அடி தூள்.!
நீண்ட நாள் பிளானை வழங்குவதில், ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்ற டிடிஹெச் கேபிள் ஆப்ரேட்டரையும் வென்று விட்டது. மற்ற ஆப்ரேட்டர்களையும் தனது கேஷ்பேக் உள்ளிட்ட ஆப்பர்களால் , மற்றொரு புறம் ஒதுக்கிவிட்டது என்ற
தற்போது, ஏர்டெல் டிஜிட்டல் டிவி நீண்ட நாள் கேஷ்பேக் ஆப்பர் வழங்குவதில் முன்னோடியாக இருக்கின்றது. மேலும், ஏர்டெல் டிஜிட்டல் டிவி நீண்ட பிளானை வழங்குவதில் தற்போது முன்னணியில் இருந்த டாடா ஸ்கையையும் முந்தியுள்ளது.

நீண்ட நாள் பிளானை வழங்குவதில், ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்ற டிடிஹெச் கேபிள் ஆப்ரேட்டரையும் வென்று விட்டது. மற்ற ஆப்ரேட்டர்களையும் தனது கேஷ்பேக் உள்ளிட்ட ஆப்பர்களால் , மற்றொரு புறம் ஒதுக்கிவிட்டது என்று கூறலாம்.

ஏர்டெல் டிஜிட்டில் டிவி:
ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது, வருடாந்திர வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் சந்தாரர்கள் ரீசார்ஜ் செய்வதால், ரூ.200 வரை கேஷ்பேக் பெற முடியும். அதாவதும் நாம் ரீசார்ஜ் செய்யும் தொகையில் 10சதவீதத்தை பெற முடியும் என்று டெலிகாம் டாக் இவ்வாறு செய்தியில் தெரிவித்துள்ளது.

டிடிஹெச் போட்டி நிறுவனங்கள்:
பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு டிடிஹெச் துறையில் போட்டியாளராக உள்ள டாடா ஸ்கை, சன்டைரக்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பிராந்திய சேனல்களை மையமாக கொண்டு பல்வேறு கவர்ச்சிகரமாக நீண்ட கால பிளான்களையும் டிஜிட்டல் டிவி அறிவித்துள்ளது.

நுகர்வோர்களை ஈர்க்க கேஷ்பேக்:
இந்நிலையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மேலும், தனது நீண்ட நாள் பிளான்களில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில், சந்தாதார்களுக்கு தங்கள் கணக்குள் ரீசார்ஜ் செய்யும் போதுஅ அவர்களுக்கு கேஷ்பேக் ஆப்பரையும் வழங்குகின்றது.

நீண்ட நாள் பிளான்களின் விலை:
நீண்ட நாள் பிளான்களில் வழங்கும் ஆண்டு அல்லது 6 மாதத்திற்கு தேவையான பல்வேறு தரப்பட்ட பிளான்களில் ரீஜினல் மேகா, வால்யூ, வால்யூ ஸ்போட்ஸ் உள்ளிட்ட பேக்குகள் துவங்குகின்றது. இதில், ரூ799 முதல் ரூ.1681 வரை இருக்கின்றது. ஆண்டு பேக்குள் ரூ.3081, முதல் ரூ.4185 வரை யும் இருக்கின்றது. இதில் 100க்கும் மேற்பட்ட நீண்ட கால பிளான்கள் ரூ.7811 வரை கொண்டுள்ளது.

அதிரடியான கேஷ்பேக்குகள்:
ஏர்டெல் டிஜிட்டல் டிவி வரும் வாடகை திட்டங்களில் நாம் ரீசார்ஜ் செய்தால, 10 சதவீதம், ரூ.200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இதில், இவைகளை நாம் ஏர்டெல் பேமெண்ட் பேக், ஏர்டெல்மணி உள்ளிட்டவைகளில் கேஷ்பேக் பெற முடியும். நாம் ஜூலை 17ம் தேதி வரை கேஷ்பேக் ஆப்பரானது இருக்கும்.


Click it and Unblock the Notifications