சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.!

|

அன்மையில் சன் டைரக்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி 2 ஹெச் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேனல்கள் கட்டணத்தை குறைத்துள்ளனர், குறிப்பாக டி.டி.எச் ஆப்ரேட்டர்கள் தற்போது
ஒளிபரப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் சேனல்களுக்கான விலை நிர்ணயத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும்  டி2ஹெச்

ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச்

இப்போது ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் நிறுவனங்களின் புதிய விலைகள் ஏற்கனவே மொபைல் ஆப் மற்றும் வெப் போர்டல் இரண்டிலும் ஆக்டிவ் ஆக உள்ளன. மேலும் கூடுதலாக இரண்டு டி.டிஎச் ஆபரேட்டர்களுமே புதிய
விலைகளை வாடிக்கையாளரின் அக்கவுண்டில் தானாகவே அப்டேட் செய்துள்ளன.

 டிஷ் டிவி

டிஷ் டிவி

இருந்தபோதிலும் டிஷ் டிவி ஆனது எந்தவிதமான விலைகுறைப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் டெலிகாம் டால்க் தளத்தின்படி டிஷ் டிவியும் கூடிய விரைவில் விலைகுறைப்புகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.!ஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.!

 ஸ்டார் இந்தியா

ஸ்டார் இந்தியா

தற்சமயம ஜீ என்டர்டெயின்மென்ட், ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் இந்தியா மற்றும் வையாகாம் 18 போன்ற முக்கியமான ஒளிபரப்பாளர்கள் தங்களதுa-la-carte கட்டண சேனல்களின் விலையை குறைத்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வையாகாம் 18-ன் கலர்ஸ் உட்பட இப்போது 12ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

12ரூபாய்-க்கு கிடைக்கின்றன

12ரூபாய்-க்கு கிடைக்கின்றன

இதனுடன் ஜிஇசி இந்தி, கலர்ஸ் கன்னடம் சேனல்களுக்கும் விலைகுறைப்பு கிடைத்துள்ளது. தவிர ஜீ என்டர்டெயின்மென்ட் ஜீ டிவி, ஜீ தெலுங்கு, ஜீ கன்னடம், ஜீ சர்தக் போன்ற தனிப்பட்ட பிராந்திய சேனல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இவைகள் இப்போது 12ரூபாய்-க்கு கிடைக்கின்றன.

இந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!இந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

ரூ.7என்கிற வீழ்ச்சியை பெற்றுள்ளது

ரூ.7என்கிற வீழ்ச்சியை பெற்றுள்ளது

மேலும் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஸ்டார் இந்தியா தனது சேனல்களின் விலையை ரூ.12-ஆக குறைத்துள்ளது. இந்த விலைகுறைப்புக்கு முன்பு ரூ.19 விலையில் வாங்க கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சேனல்களின் விலை ஆனது ரூ.7என்கிற வீழ்ச்சியை பெற்றுள்ளது.

 டாடா ஸ்கை

டாடா ஸ்கை

ஏற்கனவே சன் டைரக்ட் மற்றும் டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் விலைகள் குறைக்கப்பட்டு, குறைந்த விலையில் சேனல்களை அனுபவித்து வருகின்றனர். தற்சமயம் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி 2 ஹெச் சேனல்களின் விலைகளும் குறைக்கப்பட்டுவிட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அக்டோபர் 18

அக்டோபர் 18

குறிப்பாக இந்த புதிய விலைக்குறைப்பு நடைமுறை ஆனது அக்டோபர் 18-முதல் நடைமுறைக்கு வரும் என ஏர்டெல்
டிஜிட்டல் டிவி கூறியுள்ளதா டெலிகாம்டால்க் வலைதளம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க ஒளிபரப்பாளார்கள் செய்யும் மிகப்பெரிய நடவடிக்கை ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Digital TV and D2H Price Reduced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X