ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்ததைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.

அதிக வரவேற்பு இருக்கும்
அதன்படி ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.145-திட்டத்தில் சலுகை
பின்பு ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ.145-திட்டத்தில் குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது, அதைப் பார்ப்போம், இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் கிடைக்கும் ரூ. 148 திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. ஆப் மற்றும் விண்க் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

தெலுங்கானா மற்றும் கர்நாடாகா
தற்சமயம் இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடாகா போன்ற மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது, விரைவில் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் தமிழகத்திற்குப் பயன்படும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை
28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.495 திட்டம்:
ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும்
எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்


Click it and Unblock the Notifications