Home
News

Airtel SIM கஸ்டமர்களுக்கு டபுள் ட்ரீட்.. Data க்கு மட்டும் காசு கொடுத்தா போதும், OTT இலவசம்! எந்த திட்டத்தில்?

ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெரும்பாலான திட்டங்கள், வாடிக்கையாளர்களின் தினசரி டேட்டா தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிலான டேட்டா நன்மையை வழங்குகின்றன.ஆனாலும் எல்லா நேரமும் எல்லா விஷயங்களும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது அல்லாவா? எப்போது வேண்டுமானாலும் டெய்லி டேட்டா தீர்ந்து போகலாம்; எக்ஸ்ட்ரா டேட்டா தேவைப்படலாம்.

இந்த இடத்தில் தான் ஏர்டெல் சுவாரசியமான சலுகையை வழங்குகிறது. "டேட்டாவிற்கு மட்டும் காசு கொடுங்க.. அதுகூட ஓடிடி இலவசமா தர்றோம்" என்கிற படியாக , பார்தி ஏர்டெல் ஆனது அதன் சில டேட்டா பேக்களுடன் சேர்த்து இலவச ஓடிடி நன்மைகளையும் தொகுக்கிறது. அந்த ஓடிடி நன்மைகள் வேறுபட்டவைகளாக உள்ளன மற்றும் அதில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் திட்டங்களும் உள்ளன.

Airtel-ன் டபுள் ட்ரீட்.. Data + இலவச OTT.. எந்த திட்டத்தில்?

ஏர்டெல்லின் இந்த டேட்டா பேக் + இலவச ஓடிடி காம்பினேஷனில் மொத்தம் 4 திட்டங்கள் உள்ளன. முதல் திட்டம் பார்தி ஏர்டெல்லின் ரூ.100 திட்டம். இது மொத்தம் 6 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடுதலாக 1 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

இரண்டாவதாக உள்ள திட்டம் பார்தி ஏர்டெல்லின் ரூ.195 திட்டம். இது மொத்தம் 12 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடுதலாக 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, சோனிஎல்ஐவி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவின் ஒரு பகுதியாக 20 ஓடிடி-க்கள் ஆகிய நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

மூன்றாவதாக உள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 திட்டம் ஆகும். இது 1 ஜிபி டேட்டா + நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் + ஜீ5 பிரீமியம் + சோனிலைவ் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவின் ஒரு பகுதியாக 20 ஓடிடிகள் ஆகியவைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

நான்காவதாக மற்றும் கடைசியாக உள்ள திட்டம் பார்தி ஏர்டெல்லின் ரூ.361 திட்டமாகும். இது மொத்தம் 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடுதலாக 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

இந்த 4 திட்டங்களுக்கும் வேலிடிட்டி என்பது, அவைகளின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மைக்கான வேலிடிட்டி ஆகும்.அதாவது 30 நாட்களுக்குள் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்கான காலக்கெடு. மேலும் ஏற்கனவே ஆக்டிவ் பிளான் இருந்தால் மட்டுமே இவைகளை ரீசார்ஜ் செய்ய முடியும். தனியாக செய்ய முடியாது.

டேட்டா குறித்து பேசுகையில் - சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், பான் இந்தியா அடிப்படையில் அதன் போஸ்ட்பெய்டு திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி மற்றும் 4ஜி டேட்டா (Unlimited 5G and 4G Data) நன்மையை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் அன்லிமிடெட் டேட்டா திட்டத்தில் ஏற்கனவே உள்ள அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் பொருந்தும், போஸ்ட்பெய்டு பயனர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அன்லிமிடெட் 4ஜி டேட்டா விருப்பமும் அடங்கும்.

முன்னதாக, ஏர்டெல் சுமார் 10 வட்டங்களில் மட்டுமே இந்த அன்லிமிடெட் டேட்டா (4ஜி மற்றும் 5ஜி) சலுகையை அறிமுகப்படுத்தி இருந்த்து. இப்போது (டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி) இந்த சலுகை பான் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், மாற்றங்கள் அதிகாரப்பூர்வ தளங்களில் நேரலையில் உள்ளன.

https://tamil.gizbot.com/news/biggest-change-in-airtel-service-new-unlimited-4g-5g-data-offer-in-7-postpaid-plans-pan-india-basis-066519.html

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Data Plans With Free OTT Benefits Including Jio Hotstar Netflix Rs 100 Rs 195 Rs 279 Rs 361
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X