2025 பொங்கலுக்கு 4 நாள் லாங் லீவ்.. டூர் பிளான் போட்ட Airtel கஸ்டமர்களுக்கு கைகொடுக்க போகும் 13 திட்டங்கள்!
2025 பொங்கல் பண்டிகையானது ஜனவரி 11 - ஜனவரி 14 என்கிற லாங் வீக்கெண்டில் (Long Weekend) வருகிறது. உங்களில் சிலர் ஏற்கனவே 4 நாட்கள் நீளும் லாங் லீ -ஐ இந்நேரம் திட்டமிட்டு இருக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களுடைய டெய்லி டேட்டா லிமிட் ஆனது பற்றாமல் போகும் வாய்ப்புகள் அடிக்கடி ஏற்படலாம்.
ஏனென்றால் நீங்கள் உங்களுடைய டெய்லி டேட்டா பயன்பாட்டு வழக்கத்தில் இருந்து விலகி இருப்பீர்கள் அல்லது உங்களுடைய வைஃபை கனெக்ஷனில் இருந்து வெகுதூரத்தில் இருப்பீர்கள். இம்மாதிரியான சூழ்நிலைகளில் எக்ஸ்ட்ரா டேட்டா நிச்சயம் தேவைப்படும். ஆனால் நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) யூசராக இருந்தால்.. இதுபற்றிய கவலை உங்களுக்கு - தேவையில்லை!

ஏனென்றால் பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் 1 மணி நேர வேலிடிட்டி முதல் 1 மாத கால வேலிடிட்டி வரை வெவ்வேறு வகையான செல்லுபடியாகும் காலங்களை கொண்ட 13 டேட்டா பேக்குகள் உள்ளன. உங்களிடம் எந்தவொரு ஆக்டிவ் பிளான் இருந்தாலும் சரி, கீழ்வரும் 13 டேட்டா பேக்குகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்வதன் மூலம்.. உங்களுடைய பொங்கல் லாங் வீக்கெண்ட் ட்ரிப்பின் போது ஏற்படும் எக்ஸ்ட்ரா டேட்டா தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
01. ஏர்டெல் ரூ.11 டேட்டா பேக்: இது ஏர்டெல்லின் மிகவும் பேஸிக் ஆன டேட்டா பேக் ஆகும். ரூ.11 ஏர்டெல் டேட்டா பேக் 1 மணி நேரத்திற்கு 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். ஒருவேளை நீங்கள் 10 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தாவிட்டால், அதன் பின்னர் டேட்டா ஸ் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்
02. ஏர்டெல் ரூ. 22 டேட்டா பேக் :இது 1ஜிபி டேட்டாவை 1 நாள் என்கிற வேலிடிட்டியுடன் வழங்குகிறது. 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டைத் தாண்டிய பிறகு, டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வெறும் 1 நாளுக்கு மட்டும் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், இந்த பேக் ஒரு நல்ல விருப்பமாக இருக்கும்.
03. ஏர்டெல் ரூ.26 டேட்டா பேக்: ஒருவேளை உங்களுக்கு 1ஜிபி போதாது; சற்று கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் மற்றும் ரூ.26 பேக்கை ரீசார்ஜ் செய்யலாம். இது 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 1.5ஜிபி டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய பிறகு, ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும்.
04. ஏர்டெல் ரூ.33 டேட்டா பேக்: 1ஜிபியும் பற்றாது, 1.5ஜிபியும் போதாது. இன்னும் கொஞ்சம் டேட்டா தேவையா? ரூ.33 பேக்கை ரீசார்ஜ் செய்யலாம். இது 2 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 2ஜிபி டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும்.
05. ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக்: ஒருவேளை நீங்கள் அன்லிமிடெட் டேட்டாவை பெற விரும்பினால். ரூ.49 டேட்டா பேக் உங்களுக்கானது தான. இது 1 நாள் என்கிற வேலிடிட்டியுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் கூறினாலும் இது 20ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். 20ஜிபி பயன்பாட்டிற்கு பிறகு, டேட்டா ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
06. ஏர்டெல் ரூ.77 டேட்டா பேக்: லாங் வீக்கெண்ட் முழுவதும் உங்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டா தேவை என்றால் 7 நாள் வேலிடிட்டி உடன் வரும் ரூ.77 டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம். இதன்கீழ் 5ஜிபி டேட்டா கிடைக்கும். 5ஜிபி டேட்டா ஓதுக்கீட்டை தாண்டிய பிறகு, ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்வதன் மூலம், இந்த திட்டத்தில் கூடுதலாக 1ஜிபி டேட்டா கிடைக்கும்.
07. ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக்: ஒருவேளை உங்களுக்கு இரண்டு நாள் வரம்பற்ற டேட்டா தேவை என்றால், ரூ.99 பேக் உள்ளது. இது ஒரு நாளைக்கு 20ஜிபி டேட்டாவை (2 நாட்களுக்கு 40ஜிபி) வழங்குகிறது. ஒரு நாளைக்குள் 20ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி விட்டால், அதன் பிறகு இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
08. ஏர்டெல் ரூ.121 டேட்டா பேக்: 6ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
09. ஏர்டெல் ரூ.149 டேட்டா பேக்: ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டியின் கீழ் 1ஜிபி டேட்டா + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22+ OTT இயங்குதளங்கள்) சந்தா வழங்குகிறது
10. ஏர்டெல் ரூ.161 டேட்டா பேக்: 12 ஜிபி டேட்டா + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
11. ஏர்டெல் ரூ.181 டேட்டா பேக்: 15 ஜிபி டேட்டா + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
12. ஏர்டெல் ரூ.211 டேட்டா பேக்: டெய்லி 1 ஜிபி டேட்டா + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
13. ஏர்டெல் ரூ.361 டேட்டா பேக்: 50 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








