அதிரடி வேணாம் நின்னு விளையாடலாம்: Airtel அட்டகாச 28 நாள் திட்டங்கள்., நமக்கு இதான் சரி!

|

மற்ற நிறுவனங்கள் தங்களின் டேட்டா சலுகையை 1.5 ஜிபியில் இருந்து 3 ஜிபி வரையிலும், 5 ஜிபி வரையிலும் மாற்றி அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டியோடு கூடிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்று

'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்று

மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை

அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் அறிவித்தது.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக செயல்!பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக செயல்!

ரூ.8004 கோடியை தற்போது செலுத்திய ஏர்டெல்

ரூ.8004 கோடியை தற்போது செலுத்திய ஏர்டெல்

அதன்படி பாரதி ஏர்டெல் நிறுவனம் மொத்தம் ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவையில் வைத்து இருந்தது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.8004 கோடியை தொலை தொடர்பு துறைக்கு கட்டியது.

மொத்தம் ரூ.18004 கோடி செலுத்தியுள்ள ஏர்டெல்

மொத்தம் ரூ.18004 கோடி செலுத்தியுள்ள ஏர்டெல்

இதன் மூலம் அந்த நிறுவனம மொத்தம் ரூ.18,004 கோடி நிலுவை தொகையை செலுத்தி இருக்கிறது. மார்ச் 17-ந்தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் செலுத்தி விடுவதாக ஏர்டெல் அறிவித்திருந்தபடி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 3 ஜிபி டேட்டா

தினசரி 3 ஜிபி டேட்டா

இந்த நிலையில் வோடபோன் தங்களது திட்டத்தில் அதிரடி மாற்றம் செய்தது. அதாவது முன்னதாக தினசரி ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கி வந்தது. இந்த நிலையில் அதே விலையில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்தது. அதேபோல் பிஎஸ்என்எல் தினசரி 5 ஜிபி டேட்டா திட்டத்தையும் அறிமுகம் செய்தது.

முதலில் ரூ.148 திட்டம்

முதலில் ரூ.148 திட்டம்

இந்த நிலையில் ஏர்டெல் நிதானமாக தங்களது திட்டத்தை நிலைநிறுத்துகிறது. முதலில் ரூ.148 வழங்கப்படும் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது.

ரூ. 219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி

ரூ. 219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி

219 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.249 திட்டத்தின் கீழ் அதே 28 நாட்கள் வேலிடிட்டியுடனும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அடி தூள்: ஒரு நாளுக்கு 5 ஜிபி., 90 நாள் வேலிடிட்டி., இதுக்கு மேல என்ன வேணும்: BSNL மாஸ்!அடி தூள்: ஒரு நாளுக்கு 5 ஜிபி., 90 நாள் வேலிடிட்டி., இதுக்கு மேல என்ன வேணும்: BSNL மாஸ்!

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது அதேபோல் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.398 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு இந்த திட்டத்திற்கு 28 நாட்கள் வேலிடிட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Daily Data Recharge Plans that Offer 28 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X