Home
News

Airtel-க்கு கும்பிடு.. இனி 6 மாசம் இலவசம்.. ரூ.449 ரீசார்ஜ் போதும்.. உடனே இதை பண்ணிடுங்க.. எந்தெந்த திட்டம்?

ஏர்டெல் (Airtel) நிறுவனத்துக்கு ஒரு கும்பிடு போடனும்போல, வெறும் ரூ.449 திட்டத்தில் 6 மாதங்களுக்கான இலவச சலுகையை கொடுத்துள்ளது. வை-பை கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கும் இந்த 6 மாத இலவச சலுகையை கொடுத்து இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு போட்டியாக இந்த சலுகையை வழங்குவதால், கஸ்டமர்களுக்கு கூடுதல் செலவில்லாமல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் 6 மாத இலவச சலுகையின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனமானது, அதன் கஸ்டமர்களுக்கு 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் (Jio AI Cloud Storage) சலுகையை இலவசமாக வழங்குகிறது. ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. ஆனால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இதுபோன்ற கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது ஏர்டெல்லும் கொடுத்து இருக்கிறது.

Airtel-க்கு கும்பிடு.. இனி 6 மாசம் இலவசம்.. ரூ.449 ரீசார்ஜ் போதும்!

ஆனால், ஜியோவைவிட கூடுதலாகவும், அதே நேரத்தில் ஏற்கனவே கோடிக்கணக்கான கஸ்டமர்கள் பயன்படுத்திவரும் கூகுள் ஒன் ஸ்டோரேஜ் (Google One Storage) சலுகையை கொடுக்கிறது. ஆகவே, 100 ஜிபிக்கான கூகுள் ஒன் ஸ்டோரேஜ் சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை ஏர்டெல் கஸ்டமர்கள் 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிறது? ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. மற்றபடி போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் (Postpaid Customers) மற்றும் வை-பை கஸ்டமர்களுக்கு (Wi-Fi Customers) கிடைக்கிறது. ஆகவே, போஸ்ட்பெய்ட் மற்றும் வை-பை திட்டங்கள் அனைத்திலும் இந்த 100 ஜிபிக்கான கூகுள் ஒன் ஸ்டோரேஜ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த 6 மாதங்களுக்கு பிறகு மாதத்துக்கு ரூ.125 கட்டணத்தில் அந்த டேட்டாவை நீட்டித்துக் கொள்ளலாம். இதுவும் கட்டாயம் கிடையாது. உங்களுக்கு தேவைப்பட்டால், கட்டணத்தை செலுத்தி தொடரலாம். இல்லையென்றால், சந்தாவை கேன்சல் செய்து கொள்ளலாம். ஆகவே, 6 மாதங்களுக்கு இலவச ஸ்டோரேஜ் என்பது அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டியதாக மாறி இருக்கிறது.

ஏர்டெல் ரூ 449 போஸ்ட்பெஸ்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Postpaid Plan Details): ஏர்டெல்லில் ரூ.449 முதல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் தொடங்குகின்றன. இதில் இருந்து 100 ஜிபிக்கான கூகுள் ஒன் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

Take a Poll

1 சிம் கார்டுக்கு மட்டும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரியல் டைம் ஸ்பேம் அலெர்ட் (கால்கள் & எஸ்எம்எஸ்கள்) சலுகையை கொடுக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஓடிடி சலுகைகளும் கிடைக்கின்றன.

ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 3 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். இதுபோக சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்களை கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) பிரீமியம் சலுகையையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், வழக்கமாக ப்ரீ ஹலோடியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது.

அதேபோல அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சந்தா மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இப்படி ஏகப்பட்ட சலுகைகள் போக இப்போது 6 மாதங்களுக்கான கூகுள் ஒன் ஸ்டோரேஜ் சலுகையையும் கொடுக்கிறது. இதில் 100 ஜிபிக்கான ஸ்டோரேஜ் டேட்டாவை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Customers Get Free Google One 100GB Storage For 6 Months Postpaid Wi-Fi Plan Eligible
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X