Home
News

நாங்களும் கொடுப்போம்ல.. Airtel-ன் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.. இனி இந்த 2 பிளானையும் மக்கள் போட்டு தாக்குவாங்களே!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது எக்ஸ்ரா டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. சுவாரசியமாக இவ்விரு திட்டங்களும் ரூ.100 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் திட்டங்கள் ஆகும். அதென்ன திட்டங்கள்? இதோ விவரம்:

அதென்ன திட்டங்கள்? ஏர்டெல்லின் ரூ.65 மற்றும் ரூ.98 திட்டங்கள் மீதுதான் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் (Extra Data Offer) அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இவ்விரு ப்ரீபெய்ட் திட்டங்களுமே, வழக்கமான டேட்டா நன்மையுடன் சேரத்து கூடுதலாக 2ஜிபி டேட்டாவை (Extra 2GB Data) வழங்குகின்றன.

நாங்களும் கொடுப்போம்ல.. Airtel-ன் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்!

ஏர்டெல் வழங்கும் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் ஆனது ஒரு ஆப் எக்ஸ்க்ளூஸிவ் சலுகையாகும் (App Exclusive Offer) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ரூ.65 அல்லது ரூ.98-ஐ ஏர்டெல் ஆப் (Airtel App) வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 3ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.98-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இதுவோரு டேட்டா பிளானாகும். இதன் கீழ் உங்களுக்கு 5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவின் வேலிடிட்டி உங்களுடைய பேஸிக் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

நாங்களும் கொடுப்போம்ல.. Airtel-ன் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்!

ரூ.98 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஆப் எக்ஸ்க்ளூஸிவ் சலுகையின் ஒரு பகுதியாக 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கும். மேலும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் விங்க மியூசிக் ப்ரீமியம் சந்தாவும் (Wynk Music Premium Subscription) இலவசமாக கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.65-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதுவும் ஒரு டேட்டா பிளானாகும். இதன் கீழ் உங்களுக்கு 4ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.98-ஐ போலவே இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டாவின் வேலிடிட்டியும் கூட உங்களுடைய பேஸிக் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

நாங்களும் கொடுப்போம்ல.. Airtel-ன் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்!

ரூ.65 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஆப் எக்ஸ்க்ளூஸிவ் சலுகையின் ஒரு பகுதியாக 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா மட்டுமே கிடைக்கும். ரூ.98 திட்டத்தில் கிடைப்பதை போல, இந்த திட்டத்தின் கீழ் விங்க மியூசிக் ப்ரீமியம் சந்தா எதுவும் கிடைக்காது.

ஜியோவின் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்: ஏர்டெல்லின் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையானது ஜியோவின் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகைகளுக்கான நேரடி போட்டி என்பதில் சந்தேகமே வேண்டாம். ஜியோவின் ரூ.749 திட்டத்தின் மீது ஜியோ கிரிக்கெட் ஆபரின் ஒரு பகுதியாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கிறது. இதேபோல ஜியோவவின் ரூ.398 திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கிறது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.49 க்கு ஒரு புதிய கிரிக்கெட் பிளானையும் (Jio Rs.49 Cricket Plan) அறிமுகம் செய்திருந்தது. ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (25GB High Speed Data) கிடைக்கும். அதாவது 1 ரூபாய் 91 பைசா என்கிற விகிதத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் அல்லது சுமார் ரூ.4 க்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும்.. அதாவது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற வழக்கமான நன்மைகள், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மைகள் என எதுவும் கிடைக்காது. இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும்.

இந்த திட்டம் 1 நாள் என்கிற வேலிடிட்டி (1 Day Validity) உடன் வருகிறது. அதாவது இதுவொரு டேட்டா வவுச்சராக இருந்தாலும் கூட, இதற்கு வேலிடிட்டி உள்ளது. இருந்தாலும் கூட இதை வெறுமனே ரீசார்ஜ் செய்ய முடியாது. உங்கள் ஜியோ நம்பரில் ஆக்டிவ் ஆக ஒரு பேஸிக் ரீசார்ஜ் (Active Basic Recharge) இருந்தால் மட்டுமே ரூ.49-ஐ ரீசார்ஜ் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Customers Can Get 2GB Extra Data While Recharge Rs 65 and Rs 98 Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X