தேதி குறிச்சாச்சு! Airtel கஸ்டமர்களே உஷார்! இந்த தேதிக்கு பின்னர் ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்! Jio சிம் ரெடியா?
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, இன்னொரு பெரிய மாற்றமும் நடக்கவுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்டண உயர்வு தொடர்பாக பல்வேறு உத்திகளை கட்டவிழ்த்து விடப்போகின்றன.
ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி பார்தி ஏர்டெல் நிறுவனமானது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த (Recharge Plan Tariff Hike) திட்டமிட்டுள்ளது. ஆனால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமோ, வேறு ஒரு உத்தியை கையாளவுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதிலாக, அதிக டேட்டா பயன்பாட்டை (Greater data usage) ஊக்குவிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தியின் கீழ் ஜியோ பயனர்கள் உயர் அடுக்கு பேக்கேஜ்களுக்கு (higher-tier packages) இடம்பெயர்வார்கள். அதாவது விலை அதிகமான திட்டங்களை ரீசார்ஜ் செய்வார்கள்.
இதன் மூலம் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவிக்காமலேயே ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user -ARPU) அதிகரிக்க முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நம்புகிறது. ஐபில் (IPL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கியதும் கூட, பயனர்கள் மத்தியில் டேட்டா நுகர்வை அதிகரிப்பது குறித்த நம்பிக்கையை ஜியோவிற்கு கொடுத்து இருக்கலாம்.

ஆனால் ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற உத்தியை பின்பற்ற விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது. இது நேரடியாக ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்த வாய்ப்புள்ளது ஏர்டெல்லின் இந்த முடிவு, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டிற்கும் இடையிலான விலை வேறுபாட்டை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத (மார்ச் 2024) தொடக்கத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு குறித்து பகீர் தகவலொன்றை பகிர்ந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. மார்க்கெட் சிக்கனல்களின் சரியான மதிப்பை வைத்து, முதலீடுகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்யும் நோக்கத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னணி வகிக்கும் என்று சுனில் பார்தி மிட்டல் கூறி இருந்தார்.

ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியூ, அதாவது ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர் ஆனது இப்போது ரூ.200 ஆக உள்ளது. அதை ரூ.300 க்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்றும் சுனில் பார்தி மிட்டல் கூறி இருந்தார். நினைவூட்டும் வண்ணம், ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியு ஆனது.. அதன் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.4 மில்லியன் வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, மூன்றாம் காலாண்டில் 2.5% அதிகரிப்பை கண்டு ரூ.208 ஆக இருந்தது.
ஆக மொத்தம்.. கடந்த பல மாதங்களாக பதில் கிடைக்காமல் இருந்த கேள்விக்கு - "இந்திய டெலிகாம் துறையில் யார் முதலில் விலை உயர்வை அறிவிப்பார்கள்?" என்கிற கேள்விக்கு - தற்போது பதில் கிடைத்துள்ளது. பார்தி ஏர்டெல் தான் விலை உயர்வை அறிவிக்கவுள்ளது. அதேசமயம் ஜியோ நிறுவனம் அப்படி எதையும் செய்யப்போவது இல்லை.
ஜியோ பயனர்களுக்கு மத்தியில் அதிக டேட்டா பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தின்கீழ், பல வகையான ஜியோ ரீசார்ஜ்கள் மீது எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்களும் (Extra Data Offers) அறிவிக்கப்பட்டு உள்ளன. எடுத்துக்காட்டிற்கு ரூ.749 மீது 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது; ரூ.398 மீது 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது; ரூ.399 மீதும் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது; ரூ.219 மீது 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








