ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்த முக்கிய நன்மையைத் தூக்கிய Airtel: கதறும் பயனர்கள்.!
ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபரில் இருந்தே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் திட்டங்களை அகற்றத் தொடங்கியது. அதாவது கடந்த மாதம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிய 12 திட்டங்கள் - ஒரே நேரத்தில் - நீக்கப்பட்டது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா
அதன் பின்னர் ஜியோவின் ரூ 1,499 மற்றும் ரூ.4,199 என்கிற 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களின் வழியாக மட்டுமே டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா அணுக கிடைத்தது. தற்போது அந்த இரண்டு திட்டங்களும் கூட நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது முழுமையாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் திட்டங்களை நீக்கவில்லை. அதாவது ஏர்டெல் தனது சில திட்டங்களில் இருந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மையை மட்டுமே நீக்கியுள்ளது. ஆனால் இப்போது கூட இரண்டு அருமையான திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.

இப்போது ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் எந்தெந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை வழங்குகிறது? எந்தெந்த திட்டங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மையை வழங்கவில்லை என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் திட்டம்-1
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர விங்க் மியூசிக் பிரீமியம், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் திட்டம்-2
ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள்.
இதுதவிர பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், விங்க் மியூசிக் பிரீமியம், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்காத திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.181, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.2999 போன்ற திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை தற்போது வழங்குவதில்லை. ஆனால் இந்த திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா தேவை இல்லை என்றால் இந்த திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

5ஜி சேவை
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது இந்நிறுவனம் சில நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications