ரூ.99 விலையில் வீட்டின் மூலைமுடுக்கு வரை WiFi கனெக்ஷ்ன்.. 60+ டிவைஸ் இணைப்புடன் புது Airtel WiFi Extender..
பாரதி ஏர்டெல் (Bharti Airtel) இந்தியாவில் இப்போது வெறும் ரூ.99 விலையில் புது வைஃபை எக்ஸ்டெண்டர் (WiFi extender) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 60 டிவைஸ் வரை இணைக்க அனுமதிக்கிறது. வைஃபை சிக்னலை பூஸ்ட் (WiFi Signal Boost) செய்கிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel), அதன் பயனர்களுக்கு பல சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. இப்போது ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) பயனர்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber) பயனர்களின் 5ஜி (5G) வைஃபை ரௌட்டர் (WiFi router) உடன் இணைந்து வைஃபை சிக்னலை பூஸ்ட் அப் (WiFi signal boost up) செய்கிறது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த புதிய ஏர்டெல் வைஃபை எக்ஸ்டெண்டர் (Airtel WiFi Extender) சாதனம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) வைஃபை ரௌட்டர் (WiFi router) மூலம் கிடைக்கும் சிக்னலை வீட்டில் சிக்னல் கிடைக்காத எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்கிறது.
அதிக செலவின்றி, ஏர்டெல் பயனர்களுக்கு புதிய வைஃபை எக்ஸ்டெண்டர் (WiFi extender) சாதனத்தை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது. மாதம் வெறும் ரூ.99 கட்டணம் செலுத்துவதன் மூலம் இந்த டிவைஸை நீங்கள் சொந்தமாக்கலாம். இந்த டிவைஸை பெற, திரும்ப பெறக்கூடிய ஒரு முறை அட்வான்ஸ் தொகையான ரூ.1000 (one-time refundable security deposit) செலுத்த வேண்டும். இந்த தொகை உங்களுக்கு மீண்டும் திருப்பித்தரப்படும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.
இந்த வைஃபை எக்ஸ்டெண்டர் சாதனம் ஏர்டெல் நெட்வொர்க் (Airtel network) உடன் மட்டும் தான் வேலை செய்யுமா? அல்லது எந்தவகையான வைஃபை ரௌட்டர் இருந்தாலும், அதில் இருந்து கிடைக்கும் வைஃபை சிக்னலை இது வீடு முழுக்க கிடைக்கும் படி பூஸ்ட் (signal boost) செய்து கொடுக்குமா? என்ற உங்களின் அணைத்து சந்தேகங்களுக்குமான விடையை இப்போது பார்க்கலாம். இந்த ஏர்டெல் வைஃபை எக்ஸ்டெண்டர் பற்றிய முழு விபரம் இதோ.
இந்த புதிய வைஃபை எக்ஸ்டெண்டர் (new airtel wifi extender device) சாதனம் பார்தி ஏர்டெல்லின் கவரேஜ்+ (Bharti Airtel Coverage+) என்ற திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த வைஃபை எக்ஸ்டெண்டர் மாதாந்திரக் கட்டணமாக வெறும் ரூ. 99 என்ற விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர் ஒரு முறை திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையான ரூ.1000 செலுத்த வேண்டும். பெரிய வீடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சாதனம் மிகவும் சிறந்தது.

பெரிய வீடுகள் அல்லது பல தளங்களைக் கொண்ட வீடுகளில் நெட்வொர்க் சரியாக கிடைக்காத டார்க் நெட்வொர்க் மண்டலங்களை (dark network zones) இதன் மூலம் தவிர்க்க முடியும். ஏனெனில், இது Wi-Fi சிக்னல்களை எந்தவொரு இடையூறும் இல்லாமல் எளிதாக வீட்டின் அணைத்து இடங்களிலும் கிடைக்கும் படி செய்கிறது. இந்த வைஃபை எக்ஸ்டெண்டர் 60+ சாதனங்களை அதனுடன் இணைக்க அனுமதிக்கிறது.
இதை ஆர்டர் செய்ய, நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் மொபைல் ஆப்ஸ் (Airtel Thanks Mobile Apps) மூலம் வைஃபை எக்ஸ்டெண்டர் (wi-fi extender) என்று சர்ச் செய்யலாம். அல்லது அருகில் உள்ள ஏர்டெல் ஷோரூம் அல்லது ஏர்டெல் சில்லறை அங்காடிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான புதிய ஏர்டெல் வைஃபை எக்ஸ்டெண்டர் சாதனத்தை நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.
சந்தையில் கிடைக்கும் மற்ற வைஃபை எக்ஸ்டெண்டர்கள் பல ஆயிரம் செலவாகும் என்பதனால் இது சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








