5G சிம் கார்டு பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!

|

"5ஜி இல்லாத நாட்டுல.. எதுக்கு டா 5G போன்கள் விக்கிறீங்க?" என்று நக்கலாக பேசிய பலரும் தற்போது, ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் இறங்கி உள்ளனர்.

மறுகையில் உள்ள பலரும் "நம்ம 4ஜி போன்லயே 5ஜி வேலை செய்யுமா? 5ஜி சேவைகள் அறிமுகமானதும் புதுசா ஒரு 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டுமா? அதை பயன்படுத்த ஒரு புதிய 5ஜி மொபைலை வாங்க வேண்டுமா?" போன்ற கேள்விகளுக்கான விடைகளை தேடி வருகின்றனர்!

இதற்கிடையில்..?

இதற்கிடையில்..?

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஆனது 5ஜி சேவை, 5ஜி சிம் கார்டு, 4ஜி நெட்வொர்க்கில் இருந்து மற்றும் 5ஜி சேவைக்கு மாறுவது தொடர்பாக.. மக்கள் மத்தியில் இருக்கும் குழப்பங்களை, கேள்விகளை தீர்த்து வைக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு முக்கியமான "ரகசியத்தை" போட்டுடைத்துள்ளது.

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

அதென்ன ரகசியம்?

அதென்ன ரகசியம்?

பார்தி ஏர்டெல் நிறுவனமானது, அடுத்த ஒரு மாதத்திற்குள் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதி செய்துள்ளது!

அதனுடன் சேர்த்து, ஏர்டெல்லின் "பழைய" 4G சிம் கார்டின் வழியாகவே நிறுவனத்தின் "புதிய" 5ஜி சேவைகள் அணுக கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது..?

அதாவது..?

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் அறிமுகமானதும், கஸ்டமர்கள் புதிதாக 5ஜி சிம் கார்டுகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

மாறாக, அவர்களிடம் இருக்கும் பழைய 4ஜி சிம் கார்டினை கொண்டே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெற முடியும்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது!

இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது!

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சிம் கார்டு ஆனது ஏற்கனவே 5G சேவைகளை வழங்குவதற்கு இணக்கமானதாக உள்ளதால்.. புதிய 5ஜி சிம் கார்டுகளுக்கு வேலை இல்லை!

ஆனாலும் கூட இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது! அது என்னவென்றால், உங்களால் 4ஜி சிம் கார்டு வழியாக 5ஜி சேவைகளை அணுக முடியும் என்றாலும் கூட 4ஜி போன்களின் வழியாக 5ஜி சேவைகளை பெற முடியாது!

ஆக.. வேறு வழியே இல்ல!

ஆக.. வேறு வழியே இல்ல!

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் ஆனதும் நீங்கள் கண்டிப்பாக ஒரு 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அப்கிரேட் ஆக வேண்டும்! இல்லை என்றால் உங்களுக்கு 5ஜி கிடைக்காது!

இது குறித்து விளக்கம் அளிக்கையில், ஏர்டெல் நிறுவனத்தின் "தற்போதைய" 4G சிம் ஆனது ஏற்கனவே 5G-க்கு தயாராக உள்ள சிம் கார்டு என்பதால், வாடிக்கையாளர்கள் 5G ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே அப்கிரேட் ஆக வேண்டும் என்று ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) கோபால் விட்டல் கூறி உள்ளார்!

மேலும் "உங்களிடம் 5ஜி-ஐ சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் இருந்தால், 5ஜி சேவையின் பலனை பெற சிம்மை மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

ஆக 5ஜி சிம் கார்ட்டே அறிமுகம் ஆகாதா?

ஆக 5ஜி சிம் கார்ட்டே அறிமுகம் ஆகாதா?

இல்லை! 5ஜி சிம் கார்டுகள் அறிமுகம் ஆகும்! நீங்கள் பிரத்யேகமாக ஒரு 5G சிம் கார்டை பெறுவதன் மூலமும் கூட 5G நெட்வொர்க்கை அணுகலாம்.

அல்லது உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 5G-க்கு இணக்கமானதாக இருந்தால், அதாவது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இருந்தால்.. அதன் செட்டிங்ஸ்-இல் சில மாற்றங்களை செய்வதன் வழியாக கூட 5G நெட்வொர்க்கை அணுகலாம்.

செட்டிங்ஸ் வழியாக 4ஜி-யில் இருந்து5ஜி-க்கு மாறுவது எப்படி?

செட்டிங்ஸ் வழியாக 4ஜி-யில் இருந்து5ஜி-க்கு மாறுவது எப்படி?

உங்கள் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள Settings டேப்-ஐ கிளிக் செய்து, Connections அல்லது Mobile networks என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4G அல்லது LTE-ஐ தவிர்த்து, உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது 5G-ஐ ஆதரிக்கக்கூடியதாக இருந்தால், 5G-ஐ தேர்ந்தெடுக்கும் விருப்பம் உங்களுக்கு அணுக கிடைக்கும். அதை தேர்வு செய்வதன் வழியாக, உங்கள் ஸ்மார்ட்போனை 5G நெட்வொர்க்குடன் இணைக்கலாம்!

ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

5ஜி ஸ்பீடு.. எப்படி இருக்கும்?

5ஜி ஸ்பீடு.. எப்படி இருக்கும்?

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, 5G நெட்வொர்க் ஆனது 4G-ஐ விட 20 முதல் 30 மடங்கு வேகமாக இருக்கும். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையானது வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் கூட பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் 5ஜி - இந்தியா முழுவதும் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

ஏர்டெல் 5ஜி - இந்தியா முழுவதும் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

ஏர்டெல் 5ஜி சேவைகள் ஆனது, படிப்படியாகவே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.

அதாவது இந்த ஆண்டு டிசம்பரில், நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை அணுக கிடைக்கும். இப்படியே அடுத்த 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஏர்டெல்லின் 5ஜி சேவை நாடு முழுவதும் அணுக கிடைக்கும்!

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!

ஜியோவின் 5G அறிமுகம்: என்ன நிலையில் உள்ளது?

ஜியோவின் 5G அறிமுகம்: என்ன நிலையில் உள்ளது?

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது, இந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகமாகும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5G திட்டங்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? எந்த நிறுவனம் மலிவான விலைக்கு 5ஜி சேவைகளை வழங்கும்? 5ஜி நெட்வொர்க்கின் உண்மையான வேகம் எந்த ரேஞ்சில் இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை!

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது - ஏர்டெல் நிறுவனமும் ஜியோவும் - மிகவும் கடுமையாக போட்டி போட உள்ளன!

Best Mobiles in India

English summary
Airtel Confirms Old 4G SIM Card Work in 5G Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X