Airtel சிம் இருக்குல.. மாசம் ரூ.166-க்கு இறக்கியாச்சு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் கட்டண உயர்வுக்கு பிறகு கஸ்டமர்களை தொடர்ந்து தக்க வைக்க அடிமட்ட விலையிலான வருடாந்திர திட்டத்தில் பல்வேறு சலுகைகளை கூடுதலாக வழங்க தொடங்கி விட்டது. இப்போது, மாதத்துக்கு ரூ.166 மட்டுமே செலவாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Cheapest Prepaid Plan) வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இது கஸ்டமர்களுக்கு லாபமா? உள்ளிட்ட முழு விவரம் இதோ.
பிஎஸ்என்எல் நிறுவனம், இதுவரையில் கண்டிராதபடி புதிய கஸ்டமர்களை பெற்று வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கட்டண உயர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், 4ஜி சேவையை வழங்கும் வரையில் பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிகாம் போட்டியிலேயே இல்லையென்பதே உண்மையாகும்.

இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம், குறைவான டேட்டாவை கொடுத்து, கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை அதிக நாட்களுக்கு கொடுத்தது கஸ்டமர்கள் கவர்கிறது. இதை இப்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் செய்ய தொடங்கிவிட்டன. இதில் ஏர்டெல் பட்டையை கிளப்பும்படி மாதாந்திரம் ரூ.166 செலவில் வருடாந்திர சலுகையை கொடுக்கிறது.
ஏர்டெல் மலிவான 365 நாட்கள் திட்டம் (Airtel Cheapest 365 Days Plan): இந்த திட்டத்தின் விலை ரூ.1999ஆக இருக்கிறது. இது வருடம் முழுவதுக்கும் ஆகும் செலவாகும். அதுவே மாதத்துக்கு கணக்கிட்டால், வெறும் ரூ.166 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ்களை (SMS) கொடுக்கிறது.
ஆகவே, இந்த ஒரு வருட திட்டத்தை (One Year Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதை வருடம் முழுவதும் செய்து கொள்ளலாம். எனவே, சிம் கார்டு ஆக்டிவ் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடையாது.
இந்த திட்டம் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், 24 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா வீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்பு இந்த திட்டத்தில் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 365 நாட்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அடிமட்ட விலையில் ஓடிடி பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சலுகையை பேக் செய்துள்ளது. இதன் மூலம் டிவி ஷோக்கள், டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த விலைக்கு இந்த ஓடிடி சலுகை வரவேற்கத்தக்கதுதான். மேலும், ஏர்டெல்லில் கிடைக்கும் கூடுதல் சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
ஆகவே, அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தாவை பெற முடியும். இதை 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக விங்க் மியூசிக் (Wynk Music) மூலம் இலவச ஹாலோ டியூன்ஸ் (Free Hellotunes) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டம் எப்படி பார்த்தாலும் நல்ல சலுகைகளையே கொடுக்கிறது. ஜியோவிலும் இப்படி திட்டம் உள்ளது.
ஏர்டெல்லைவிட கம்மியாக ரூ.1899 விலையில் கிடைக்கிறது. ஆனால், 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரி எஸ்எம்எஸ் சலுகை கிடையாது. அதேபோல 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஏர்டெல் திட்டத்தில் கூடுதலாக 29 நாட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. அதேநேரத்தில் விலை ரூ.100 அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








