Home
News

அடிச்சு தூக்கிய Airtel.. ரூ.100 திட்டத்தில் திடீர் ஏற்றம்.. இனி எக்ஸ்ட்ரா டேட்டா, 22 OTT கிடைக்கும்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆனது ரூ.77 மதிப்புள்ள புதிய டேட்டா பேக்கை அறிமுகம் செய்த வேகத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஆரம்ப நிலை டேட்டா பேக் ஆன ரூ.100 திட்டத்தின் நன்மைகளை அதிரடியாக திருத்தி உள்ளது.

தற்போது ஏர்டெல்லின் ரூ.100 டேட்டா பேக் ஆனது எந்த விதமான விலை மாற்றமும் இல்லாமல் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. முன்னர் இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 5ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கியது. இனிமேல் இது 6 ஜிபி டேட்டாவை வழங்கும்படி திருத்தப்பட்டுள்ளது.

Airtel: ரூ.100 திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா டேட்டா, 22 OTT!

1ஜிபி டேட்டா அதிகரிப்புடன் சேர்த்து பாரதி ஏர்டெல் நிறுவனமானது, ரூ.100 டேட்டா பேக் உடன் 1 மாத காலத்திற்கான இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவையும் (Airtel Xstream Play Premium Subscription) வழங்குகிறது. இதன் கீழ் உங்களுக்கு 22 க்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்.

மேலோட்டமாக பார்த்தால் ரூ.100 டேட்டா பேக்கில் நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தம் சிறியதாக தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கூடுதல் ஜிகாபைட்டும் கணக்கிடப்படும் மிகவும் போட்டி நிறைந்த தொலைத்தொடர்பு சந்தையில், 5ஜிபி இல் இருந்து 6 ஜிபி வரை என்கிற அதிகரிப்பு பல பயனர்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வது, வீடியோ கால்கள் செய்தல் அல்லது சோஷியல் மீடியாக்களில் ப்ரவுஸிங் செய்தல் என எதுவாக இருந்தாலும், கூடுதல் 1 ஜிபி என்கிற அளவிலான டேட்டா நிச்சயமாக பயனர்கள் பயன்பாட்டை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க அனுமதிக்கும்

குறிப்பாக வெறும் ரூ.100 க்கு 30 நாட்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் அணுகல் என்பது தனித்துவமான நன்மையாகும். இதன்கீழ் சோனி லைவ், லயன்ஸ்கேட் ப்ளே, ஆஹா, ஹோய்சோய், சன்என்எக்ஸ்ட் உட்பட 22-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் இருந்து கன்டென்ட்களை அணுகலாம்.

6ஜிபி என்கிற டேட்டா ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களிடம் ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் பெயர் குறிப்பிடுவது போலவே, ரூ.100 டேட்டா பேக்கை தனியாக ரீசார்ஜ் செய்ய முடியாது, ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள ஒரு மெயின் ரீசார்ஜ் உடன் சேர்த்து மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.77 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.77 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது மற்றும் சோனி லைவ் (SonyLIV) ஓடிடி-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை ஆனது பயனர்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவானது 30 நாட்களுக்கு நீடிக்கும்.

சோனி லைவ் ஓடிடி-யில் உள்ள கன்டென்ட்களை பார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் அதை ஜியோடிவி ஆப் (JioTV App) வழியாக ஸ்ட்ரீமிங் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம், ஜியோடிவி ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

ஏர்டெல் VS ஜியோ: ஒப்பீட்டளவில் ஏர்டெல்லின் ரூ.100 திட்டம் தான் வெளிப்படையான வெற்றியாளர். இது ஜியோவை (3ஜிபி) விட 2 மடங்கு அதிக டேட்டாவை (6ஜிபி) வழங்குகிறது; நிச்சயமாக ஜியோவை விட ரூ.33 விலை அதிகம் தான். ஆனாலும் ஏர்டெல் தான் சிறந்ததாக தெரிகிறது. ஓடிடி நன்மையில் இரண்டும் சமநிலையில் உள்ளன. இரண்டுமே - இப்போதைக்கு மிகவும் தேவையாக உள்ள (ஆசிய கிரிக்கெட் போட்டிகளை பார்க்க) சோனி லைவ் சந்தாவை இலவசமாக வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Changed Rs 100 Plan Benefits Now Offers 6GB Data 22 Free OTT Including Sony Liv For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X