Home
News

இதுவரை யாருமே வழங்காத நன்மைகளுடன் ஏர்டெல் ரூ.59/- அறிமுகம்.!

இனி ரூ.59/- என்கிற பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் திட்டமானது 500எம்பி அளவிலான டேட்டாவுடன், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்கும்.

By Muthuraj

மேலுமொரு ஜியோவிற்கு எதிரான நடவடிக்கையாக, இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் நுழைவு ரீசார்ஜ் திட்டமான ரூ.59/-ல் ஒரு சுவாரசியமான திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை யாருமே வழங்காத நன்மைகளுடன் ஏர்டெல் ரூ.59/- அறிமுகம்.!

அப்படியாக, ஏர்டெல் அதன் ரூ.59/-ல் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தம் என்ன.? ரூ.59/- திட்டமானது யாருக்கெல்லாம் வாங்க கிடைக்கும்.? இந்த திட்டத்திற்கு எதிரான ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி ரீசார்ஜ் திட்டம் என்ன.? அதன் நன்மைகள் என்ன.? ஆகியவற்றை விரிவாக காண்போம்.

செல்லுபடி

செல்லுபடி

இனி ரூ.59/- என்கிற பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் திட்டமானது 500எம்பி அளவிலான டேட்டாவுடன், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்கும். இந்த திட்டம் மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மலிவான விலை

மலிவான விலை

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் உட்ப இந்திய டெலிகாம் துறையில் உள்ள எந்தவொரு நிறுவனமும் இந்த அளவிலான மலிவான விலையின்கீழ் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும் நன்மைகளை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் மற்ற வட்டாரங்களிலும்

விரைவில் மற்ற வட்டாரங்களிலும்

முக்கிய குறிப்பாக இந்த திட்டம் தற்போது வரையிலாக, கொல்கத்தாவில் மட்டும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் ஏர்டெல் நிறுவனம் அதன் மற்ற வட்டாரங்களிலும் இதே போன்றதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தக்கூடும்.

வரம்பு இருக்காது

வரம்பு இருக்காது

குறிப்பாக, இந்த திட்டம் ஒரு மலிவு விலையிலான குரல் அழைப்பு திட்டம் தேடும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பற்ற காம்போ திட்டங்களின் கீழ் வந்தால், இதன் குரல் அழைப்பு நன்மைகளுக்கு எந்தவிதமான வார மற்றும் மாத வரம்பும் இருக்காது.

வேறுபாடு

வேறுபாடு

மற்ற வட்டாரங்களில், பார்தி ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் ப்ரமீஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இதே விலை நிர்ணயத்தில், அதாவது ரூ.59/-க்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. ஆனால் இரண்டு திட்டங்களுக்கும் இடையிலேயான நன்மைகள் பெரிய வித்தியாசத்தில் வேறுபடுகின்றன.

ஏழு நாட்களுக்கு செல்லுபடி

ஏழு நாட்களுக்கு செல்லுபடி

மற்ற வட்டாரங்களில் கிடைக்கும் இந்த திறந்தவெளி சந்தை திட்டமானது, ரோமிங் குரல் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்டிடி அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ரீசார்ஜ் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் 500எம்பி அளவிலான டேட்டா ஆகியவைகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.52/-

ஜியோ ரூ.52/-

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவிடம் இதுபோன்ற திட்டங்கள் கைவசம் இல்லை என்றாலும் கூட மலிவு விலை திட்டமான ரூ.52/- கிடைக்கிறது. இதன் நன்மைகளை பொறுத்தமட்டில், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 150எம்பி அளவிலான டேட்டா, 70 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை மொத்தம் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Challenges Reliance Jio by Offering Unlimited Roaming Voice Calls, 500MB Data for 27 Days at Rs 59. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X