பயனர்களுக்கு நற்செய்தி சொன்ன Airtel CEO: 5G சேவையை பெற இதை செய்தால் போதும்.!

|

ஏர்டெல் (Airtel) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற பல்வேறு நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 5ஜி சேவை

5ஜி சேவை

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செய்திக்குறிப்பில் 5ஜி குறித்தும் அதன் சிறப்பு அம்சங்களை குறித்தும் தெளிவாக
விளக்கியுள்ளார். அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நேரம் வந்துவிட்டது.. ஆரம்பமே அமர்க்களம் செய்யும் Flipkart- ரூ.16,000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்!நேரம் வந்துவிட்டது.. ஆரம்பமே அமர்க்களம் செய்யும் Flipkart- ரூ.16,000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்!

எந்தெந்த நகரங்களுக்கு 5ஜி சேவை

எந்தெந்த நகரங்களுக்கு 5ஜி சேவை

அடுத்த மாதம் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை மற்றும் சில நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம் என்று தெரிகிறது.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

2023-ம் ஆண்டு

2023-ம் ஆண்டு

அதேபோல் வரும் 2023-ம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்த 5ஜி சேவை விரிவுபடுத் ஏர்டெல் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. பின்பு அவரவர் நகரங்களில் 5ஜி சேவை எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸை பதிவிறக்கம்
செய்து வைத்துக் கொள்ளுமாறும் ஏர்டெல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

 5ஜி மொபைல்

5ஜி மொபைல்

குறிப்பாக 5ஜி சேவையை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களிடம் ஒரு 5ஜி மொபைல் இருக்க வேண்டும். அதேபோல் பயனர்களுக்கு மகழிச்சி தரக்கூடிய செய்தியும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதாவது இதுபோன்ற புதிய சேவையை அப்க்ரேட் செய்யும் போது சிம் கார்டை மாற்றவேண்டியது இருக்கும்.

உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் 4ஜி சேவை வரும் போது, 2ஜி மற்றும் 3ஜி சிம் வைத்திருந்த அனைவரும் 4ஜி சேவையை பெறுவதற்காக புதிய சிம் கார்டை வாங்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையை பெற நீங்கள் உங்களது 4ஜி சிம் கார்டையே பயன்படுத்தலாம். புதிதாக 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டியது இல்லை என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

எப்படி பயன்படுத்துவது

எப்படி பயன்படுத்துவது

நீங்கள் இருக்கும் நகரத்தில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகமான உடன் உங்களது போனில் நெட்வொர்க் செட்டிங்கிற்கு சென்று 5ஜி சேவையை ஆன் செய்தால் போதும். அவ்வளவு தான் 5ஜி சேவையை பெற முடியும்.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

எவ்வளவு வேகம்

எவ்வளவு வேகம்

இப்போது இருக்கும் 4ஜி சேவையை விட 20 அல்லது 30 மடங்கு வேகமாக இன்டர்நெட் சேவையை இந்த 5ஜி மூலம் பெறமுடியும். குறிப்பாக தடங்கல் இன்றி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கும், அதிவேக இன்டர்நெட் பயன்பாட்டிற்கும் உதவும் 5ஜி சேவை. அதேபோல் வீட்டில் இருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு இந்த 5ஜி சேவை மிக அருமையாக உதவும் என்றே கூறலாம்.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

 கட்டண விவரங்கள்

கட்டண விவரங்கள்

ஏர்டெல் நிறுவனம் அடுத்த மாதம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கட்டண விவரங்கள் பற்றி எந்த அறிவிப்பையும் ஏர்டெல் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel CEO sends personalized email to users: Clears doubts about Airtel 5G: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X