அட இப்படிக்கூட நடக்குமா? வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுத்த ஏர்டெல் சி.இ.ஒ.!

|

ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஏர்டெல் தலமை செயல் அதிகாரி கோபால் விட்டல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 இந்தியாவில் தற்போது

அது என்னவென்றால், இந்தியாவில் தற்போது ஆன்லைன் பரிமாற்றங்கள் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருவதால் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று பயனர்களிடம் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு

மேலும் இதுகுறித்து அவர் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியது என்னவென்றால், இந்தியாவில் இரண்டு முக்கிய வழிகளில் ஆன்லைன் திருட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

விரைவில்: ரூ.28,999-விலையில் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்.!விரைவில்: ரூ.28,999-விலையில் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்.!

ர்டெல் ஊழியர்கள் என்று கூறி

அதன்படி முதலில் ஏர்டெல் ஊழியர்கள் என்று கூறி பயனர்களுக்கு அழைப்பு மேற்கொள்கின்றனர். மற்றொரு புறம் பயனர்கள் டிஜிட்டல் பேமன்ட் செய்யும் போது சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. அதேசமயம் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது என்று கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் என்று

குறிப்பாக ஏர்டெல் ஊழியர்கள் என்று கூறிக்கொண்டு வாடிக்கையாளர்களின் KYC விவரங்கள் முழுமையாக பூர்த்தி
செய்யப்படவில்லை என கூறி, குவிக் சப்போர்ட், டீம் வீவர் போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்து பயனரின் சாதனத்தை இயக்கும் வசதியை திருடர்கள் பெற்றுவிடுகின்றனர்.

வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து முன்பனம் செலுத்த

மேலும் ஏர்டெல் ஊழியர் என்று கூறி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் மிகமுக்கிய விஐபி எண்களை குறைந்த விலையில் வழங்குவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து முன்பனம் செலுத்த கூறிகின்றனர்.

ஏர்டெல் மூன்றாம் தரப்பு செயலிகளை

அதாவது பயனர்களிடம் ஏர்டெல் மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய எப்போது வலியுறுத்தாது. அதேசமயம்ஏர்டெல் விஐபி எண்களை அழைப்புகளின் மூலம் விற்பனை செய்வதில்லை என்று தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

வருவாய் கொண்ட

அண்மையில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன்இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ர்டெல் நிறுவனம் வெளியிட்ட

மேலும் ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,இந்த கொரோனா காலத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். அதாவது ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ய ரீசார்ஜ் கூப்பன்

குறிப்பாக ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன் ஆனது 100எம்பி டேட்டா, 38 ரூபாய் டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் 79 ரூபாய் கூப்பன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்த சலுகை வாயிலாக, 270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Airtel CEO Gopal Vittal warns users against cyber scams: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X