Jio வாங்கிய 700MHz ஸ்பெக்ட்ரத்தை Airtel ஏன் வாங்கவில்லை? இது தீங்கு விளைவிக்குமா!

|

சமீபத்தில் நடந்த முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமே 5ஜி சேவைகளை வழங்குவதற்காக 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்குச் சென்றது. இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்கள் எதுவுமே குறிப்பாக இந்த 700 MHz அலைக்கற்றையை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ முழுமையாக வாங்க நினைத்த 700 MHz ஸ்பெக்ட்ரத்தை ஏன் Airtel போன்ற மற்ற நிறுவனங்கள் வாங்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏர்டெல் ஏன் 700 MHz அலைவரிசைக்குச் செல்லவில்லை?

ஏர்டெல் ஏன் 700 MHz அலைவரிசைக்குச் செல்லவில்லை?

இந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை ஏர்டெல் நிறுவனம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது. ஏன் ஏர்டெல் 700 MHz அலைவரிசைக்குச் செல்லவில்லை என்று கேள்விக்கு, Airtel-லின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் விளக்கமளித்துள்ளார். ஆனால், அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் உண்மையில் என்ன செய்கிறது என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்.

700 MHz ஸ்பெக்ட்ரம் ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது?

700 MHz ஸ்பெக்ட்ரம் ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது?

700 MHz ஸ்பெக்ட்ரம் உலகெங்கிலும் உள்ள ஆபரேட்டர்களால் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது வழங்கக்கூடிய கவரேஜ் சிறப்பானது. டெலிகாம் பிளேயர்கள் அதை வழங்க விரும்புகின்றனர் ஏனெனில் இதில் டீப் இன்டோர் கவரேஜ் கிடைக்கிறது. குறைந்த ஃபிரிக்வென்ஸியில், சிறந்த கவரேஜ் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பே உயர் டவுன்லிங்க் வேகம் தானா?

இதில் உள்ள சிறப்பே உயர் டவுன்லிங்க் வேகம் தானா?

அதேபோல், டெல்கோஸ் ஏற்கனவே உயர் டவுன்லிங்க் (பதிவிறக்க வேகம்) வழங்குவதற்கான உயர் ஃபிரிக்வென்ஸி ஸ்பெக்ட்ரம்களை கொண்டுள்ளது. ஆனால், இது பயனர் அனுபவத்தின் அடிப்படையை உருவாக்கும் முக்கியமான அப்லிங்க் ஆகும். அப்லிங்க் திறன்கள் இல்லாமல், பயனர்களுக்கு கவரேஜ் இருக்காது என்று விட்டல் கூறியுள்ளார். அப்லிங்க் மூலம் பயனர்கள் மற்றவர்களுக்குக் பைல்களை அனுப்பலாம் அல்லது அழைப்புகள் செய்யலாம்.

Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?

கவரேஜ் சூப்பர்.. Ok.. அப்போ ஏன் Airtel இதை வாங்கவில்லை?

கவரேஜ் சூப்பர்.. Ok.. அப்போ ஏன் Airtel இதை வாங்கவில்லை?

எனவே, 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் சிறந்த அப்லிங்க் திறன்களைக் கொண்ட பயனர்களுக்கு அதிக கவரேஜ் அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல், நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கும் இவை சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. சரி தான், அப்போது, கவரேஜுக்கு நல்லது என்றால் ஏர்டெல் ஏன் 700 மெகா ஹெர்ட்ஸ்க்கு செல்லவில்லை? என்ற கேள்வி தான் நமக்கு உதயமாகிறது.

700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏர்டெல்லுக்கு தேவையில்லை

700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏர்டெல்லுக்கு தேவையில்லை

பல காரணங்களால் ஏர்டெல்லுக்கு 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தேவையில்லை என்று விட்டல் கூறியுள்ளார். ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, ஏர்டெல் மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தின் மிகப்பெரிய தொகுப்பை (4 வட்டங்களில் 30 மெகா ஹெர்ட்ஸ் மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் மற்றும் மீதமுள்ள வட்டங்களில் குறைந்தது 20 மெகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் அதிகமாக) வாங்கியிருக்கிறது.

ஏர்டெல்லிடம் இருக்கும் மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் அளவு வேறு யாரிடமும் இல்லையா?

ஏர்டெல்லிடம் இருக்கும் மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் அளவு வேறு யாரிடமும் இல்லையா?

எந்தவொரு போட்டியாளரிடமும் அத்தகைய ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்திடம் இவ்வளவு ஈர்க்கக்கூடிய மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் அளவு இல்லையென்றால், தற்போது நடத்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்டெல் 700 மெகா ஹெர்ட்ஸை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிருக்கும் என்று விட்டல் கூறுகிறார். அதேபோல், அதை வாங்க நிறுவனம் அதிகப் பணத்தைச் செலவிட வேண்டியதிருக்கும்.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

Airtel இடம் 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் இருக்கிறது

Airtel இடம் 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் இருக்கிறது

ஏர்டெல் இந்த ஸ்பெக்ட்ரான்களை வாங்கி இருந்தால், பெரிய பவர் கஸ்லிங் ரேடியோக்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக 700 MHz அதிக கார்பன் உமிழ்வுகளுக்கு வழிவகுத்திருக்கும் என்று அவர் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஏர்டெல்லுக்கு டெல்கோவின் தற்போதைய 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்டை விடக் கூடுதல் கவரேஜை வழங்காது என்று விட்டல் கூறியுள்ளார்.

700 MHz சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்குமா?

700 MHz சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்குமா?

எனவே, நாள் முடிவில், 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏர்டெல்லுக்கு அதிகப் பணத்தை மட்டுமே செலவிட செய்திருக்கும். அதே நேரத்தில், இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவித்திருக்கும் என்பதனாலும் ஏர்டெல் அதற்குச் செலவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மேல் 700 MHz பற்றி கூற எந்த கூடுதல் நன்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், இதன் வேகம் குறித்தும் சில தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜியோ மட்டும் ஏன் இந்த ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது?

ஜியோ மட்டும் ஏன் இந்த ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது?

இதன் வேகத்தைப் பொறுத்தவரை, 5ஜி சோதனைகளின் போது, ​​சப்-ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம், SA நெட்வொர்க்கில் கூட 8-10 Mbps வேகத்தை விட அதிகமாக வழங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். இது 4ஜி வேகத்திற்கு நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், இப்படிச் சிக்கலான ஸ்பெக்ட்ரத்தை ஏன் ஜியோ முழு ஆர்வத்துடன் வாங்கியது என்ற கேள்வி தான் நம்மிடம் எழுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel CEO Gopal Vittal Explains Why it Didn’t Go for 700 MHz Spectrum In The 5G Auction

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X