SIM Card-ஐ மாத்துங்க.. Airtel கஸ்டமர்களுக்கு மெயில் போட்ட கோபால் விட்டல்.. யார் இவர்? ஏன் மாற்ற வேண்டும்?
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைவர் ஆன கோபால் விட்டல் (Gopal Vittal), வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான சிம் கார்டுகளுக்கு (Regular SIM Card) பதிலாக இ-சிம்களை (e-SIM) பயன்படுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுளார். ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:
முதலில் இ-சிம்கள் என்றால் என்னவென்று பார்த்துவிடலாம். பின்னர் கோபால் விட்டல் ஏன் இ-சிம்களை பயன்படுத்துமாறு கூறியுள்ளார்? அதனால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன நன்மைககள் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்? எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இ-சிம்களை ஆதரிக்கின்றன? இதோ பதில்கள்:

இ-சிம்கள் என்றால் என்ன? இதுவும் சிம் கார்டுகளை போன்றது தான். ஆனால் நீங்கள் மொபைல் போன்களில் செருகும் கார்டுக்கு பதிலாக இது உங்கள் மொபைலிலேயே கட்டமைக்கப்படும். இ-சிம்கள் வேலை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்பெஷல் சாஃப்ட்வேர் (Special Software) பயன்படுத்தப்படுகிறது. இ-சிம்களுக்கு மாறுவது, நாம் நம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவரும்.
குறிப்பாக பிஸிக்கல் சிம் கார்டுகளிலிருந்து (Physical SIM Cards) விலகி, இ-சிம்களை தேர்வு செய்வதன் மூலம், ஸ்மார்ட்போன்கள் தொலைந்துபோகும் அல்லது திருடப்படும் சம்பவங்களின் போது.. மிகவும் வேகமான மற்றும் எளிமையான பாதுகாப்பு அம்சங்களை (Security Features) வழங்கும். மேலும் இ-சிம்கள் மிகவும் மென்மையான கனெக்டிவிட்டியையும் உறுதி செய்யும்.

கோபால் விட்டல் ஏன் இ-சிம்களை பயன்படுத்துமாறு கூறுகிறார்? கோபால் விட்டல், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம்களின் நன்மைகளை பற்றிய ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் இ-சிம்கள் தடையற்ற கனெக்டிவிட்டியை (Conectivity) வழங்குகின்றன. இது டிவைஸ்களுக்கு இடையில் மாறுவதை எளிதாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொபைல் போன் திருடர்கள், அதிலுள்ள சிம் கார்டுகளை எடுப்பதை இ-சிம்கள் எவ்வாறு கடினமாக்கும் என்பதையும் அவர் விளக்கி உள்ளார். இ-சிம்கள் ஆனது "பிஸிக்கல்" ஆக அகற்றப்படும் "பாரம்பரிய" சிம்களை போல அல்ல. எனவே தொலைந்து போன ஸ்மார்ட்போனை மிகவும் எளிதாக கண்காணிக்க முடியும்" என்று விட்டல் கூறியுள்ளார்.

எந்தெந்த டிவைஸ்களில் ஏர்டெல்லின் இ-சிம்களை பயன்படுத்த முடியும் என்றும் கோபால் விட்டால் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக, பிஸிக்கல் சிம் கார்டை இ-சிம் ஆக மாற்ற ஆர்வமுள்ளவ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் இதற்கான செயல்முறையை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இ-சிம்களை ஆதரிக்கின்றன? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரீஸில் (Apple iPhone 12 Series) இ-சிம் கார்டுகளுக்கான ஆதரவை அறிமுகப்படுத்தியது. அப்போது முதலே இ-சிம் கார்டுகளின் நன்மைகள் பற்றிய பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் மேலோங்க தொடங்கியது. ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இ-சிம் ஆதரவு உடனான ஸ்மார்ட்போன்களை உருவாக்க தொடங்கியுள்ளன.
ஏர்டெல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க்கை (Optical Transport Network) பயன்படுத்துவதற்காக நோக்கியா நிறுவனமானது பார்தி ஏர்டெல் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டணி ஏர்டெல்லுக்கு அதிகரித்த திறன், உயர்ந்த நம்பகத்தன்மை மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றை வழங்குமென்றும், ஒட்டுமொத்தமாக இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை பற்றி அறிந்த ஆதாரங்களின்படி, பார்தி ஏர்டெல்லின் கோர் நெட்வொர்க் லேயரின் டேட்டா பரிமாற்ற திறன் (Data Transmission Capacity of a Core Network Layer) இரட்டிப்பாகும், மேலும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு டேட்டாவை அனுப்பும் அதன் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் திறன் (Optical Fibre Network Capacity to Transmit Data) தற்போதைய திறனில் இருந்து நான்கு மடங்கு வரை வளரும்.


Click it and Unblock the Notifications








