84 நாட்கள் வேலிடிட்டி.. டெய்லி 2ஜிபி டேட்டா, ஓடிடி.. பட்ஜெட் விலையில் இப்படியொரு Airtel திட்டமா?
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் அசத்தலான சலுகைகள் மற்றும் டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது.
அதேபோல் ஜியோ நிறுவனத்தைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இந்தியா உள்ள அனைத்து நகரங்களிலும் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அட்டகாசமான சலுகைகளை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல். இப்போது அந்த திட்டத்தின் முழு நன்மைகளைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம். அதிக பலன்கள் இந்த திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஏர்டெல் நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் பர்பெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.319ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஏர்டெல் ரூ.2199 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.2199 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள்இ விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.2199ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு வருடம் (365 நாட்கள்) மாதம் ஆகும்.


Click it and Unblock the Notifications








