கம்மி விலை.. தினமும் 1.5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. ஏர்டெல்லின் அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்..
ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் தான் புதிய புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அதிகம் வழங்குவதில்லை.
சமீபத்தில் கூட ஏர்டெல் (airtel) நிறுவனம் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்பின்பு ஜியோ நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து அதில் நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கியது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சலுகையை அறிவித்தால் போட்டிக்கு ஏர்டெல் நிறுவனமும் சலுகையை அறிவித்துக் கொண்டே தான் இருக்கிறது.

சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்கும் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட அட்டகாசமான சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் ரூ.519 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் 77 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், rewardsmini subscription, அப்பல்லோ 24|7 சர்க்கிள்இ விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நீங்கள் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) அடிப்படையில், 30 ஜிபி அதிகபட்சமாக ஒதுக்கப்படும். ஆனால், இந்த 30 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதாவது 30 ஜிபிக்கு மேல் பயன்படுத்தும் டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








