ஏர்டெல் புரட்சி : இதை விட்டால் ஜியோவை எதிர்கொள்ள வேறு வழியே இல்லை.!

|

இந்திய தொலைத்தொடர்பு துறையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுகூடி செயல்பட்டும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பது தான் உண்மை. கிட்டத்தட்ட சரிக்கு சமமான சலுகைகள், விலை நிர்ணயம், செல்லுபடி காலங்கள், கட்டண திருத்தங்கள் நிகழ்த்தியும் கூட ஜியோவின் அபார வளர்ச்சியையும், வாடிக்கையாளர் ஆக்கிரமிப்பையும் ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய பெருநிறுவனங்களால் தடுக்கவே முடியவில்லை.

ஜியோ 4ஜி சேவைகளை எதிர்கொள்ள வேறு வழியே இல்லை ஒரு நிலைப்பாடு உண்டாக்கிவிட்ட நிலையில் தற்போது ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜியோவிற்கு எதிரான தங்களது பிரம்மாஸ்திரத்தை ஏவ உள்ளன, அதுவும் நோக்கியாவின் உதவியுடன்.!

5ஜி தொழில்நுட்ப பயன் நிலை

5ஜி தொழில்நுட்ப பயன் நிலை

இந்தியாவின் பிராதன தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ற்றும் மாநில அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய சந்தைக்கு பொருத்தமுடையதாக இருக்கும் 5ஜி தொழில்நுட்ப பயன் நிலைகளை வரையறுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஏற்கனேவே இருக்கும் நெட்வர்க்குகளை 5ஜி நெட்வொர்க்குகளாக மாற்றும் இந்த பணியில் இரண்டு நிறுவனங்களுக்கும் நோக்கியா நிறுவனம் உதவி புரியவுள்ளது என்பதும், நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் புரிந்துகொள்ளல் (புரிந்துணர்வு) ஒப்பந்தம் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.

5ஜி மூலோபாயம்

5ஜி மூலோபாயம்

"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னால் 5ஜி தொழிநுட்பம் அறிமுகமாகும் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முழுமையான 5ஜி மூலோபாயத்தை வழிவகுக்கும் மற்றும் அதற்கான தேவையான இலக்கைக் பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு அடையாளம் காணப்படும்" என்று சஞ்சய் மாலிக் (நோக்கியா இந்தியா) சந்தை தலைவர் கூறியுள்ளார்.

ஒன்பது வட்டங்களில்

ஒன்பது வட்டங்களில்

இந்தியாவில், 5ஜி உள்ளடக்கம் மற்றும் பயன்பாடு சோதனைகள் 2018 ஆம் ஆண்டை சுற்றி துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே குஜராத், பீகார், உ.பி. கிழக்கு, மும்பை, மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியபிரதேசம் பஞ்சாப் மற்றும் கேரளா என்ற ஒன்பது வட்டங்களில் ஏர்டெல் பிணையத்திற்கான 4ஜி உபகரணங்களை நோக்கியா வினியோகிக்கிறது. அது சமீபத்தில் பிஎஸ்என்எல் தொலைத் ஆபரேட்டர் ஒரு மேம்பட்ட கொள்முதல் ஆர்டரில் பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் நிறுவ

இந்தியாவில் நிறுவ

"5ஜி தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்கிறது. ஆக அதை இந்தியாவில் நிறுவ என்னென்ன வழிகள் மற்றும் சாத்தியங்கள் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். நீங்கள் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மற்றும் வளரும் 5ஜி தொழிநுட்பத்தை பார்த்தால் 5ஜி என்பது 3.5ஜிகா ஹெர்ட்ஸ் அல்லது 700 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமல்ல. மில்லிமீட்டர் அலைகள் மற்றும் சென்டிமீட்டர் அலைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஜிகாஹெர்ட்ஸ் முன்னேற்றம் ஆகியவைகளையும் அடக்கியுள்ளது"அமித் மார்வா (நோக்கியா இந்தியா சந்தை) கூறியுள்ளார்.

ஜியோ நிறுவனமும்

ஜியோ நிறுவனமும்

மறுபக்கம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel and BSNL working with Nokia to transform networks to 5G. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X