ஏர்டெல், பிஎஸ்என்எல்: ரூ.700-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பிராட்பேண்ட் திட்டங்கள்.!

|

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு பிராட்பேண்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களை வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 பிராட்பேண்ட் திட்டங்களில் கூடுதல்

அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் சில பிராட்பேண்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் பயனருக்கு அதிவேக இணையத்தை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ரூ.700-க்கு கீழ் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய வம்சாவளி பாரக் அகர்வால் எடுத்த அதிரடி டிவிட்டர் நடவடிக்கை.. புதிய தனியுரிமை கொள்கைகள்..இந்திய வம்சாவளி பாரக் அகர்வால் எடுத்த அதிரடி டிவிட்டர் நடவடிக்கை.. புதிய தனியுரிமை கொள்கைகள்..

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ரூ.700-க்கு கீழ் ஒரே ஒரு பேஸிக் திட்டத்தை மட்டும் வழங்குகிறது. அதாவது இந்நிறுவனம் ரூ.449 விலையில் பயனர்களுக்கு பிராட்பேண்ட திட்டத்தை வழங்குகிறது. இந்த பிராட்பேண்ட் திட்டம் 40 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், தனிப்பட்ட பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பேஸிக் திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் பெனிஃபிட்டின் ஒரு பகுதியான வின்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கான சந்தாவும் அணுக கிடைக்கும். அதேபோல் ஏர்டெல்லின் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தில் பயனர்கள் 3.3TB அல்லது 3300GB அளவிலான மாதாந்திர FUP டேட்டாவைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!

 பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.700-க்குள் இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.700-க்கு கீழ் ஃபைபர் பேசிக் மற்றும் ஃபைபர் பேசிக் பிளஸ் என்கிற இரண்டு திட்டங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.449 விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் திட்டம் ஆனது பயனர்களுக்கு 30Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 3300ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பித்தக்கது. அதேபோல் இந்த திட்டம் ஒரு மாதம் செல்லுபடியாகும். பின்பு இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற பதிவிறக்க விருப்பங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்நிறுவனத்தின் ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டம் மாதத்திற்கு ரூ.599-க்கு அணுக கிடைக்கிறது. மேலும் இது 3300 ஜிபி வரை டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இது 60 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை வழங்குகிறது, அதன்பின்பு இணைய வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக
குறைக்கப்படும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களுக்கான விலைகளும் ஜிஎஸ்டிக்குபிரத்தியேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

வந்துருச்சு.,அறிமுகமான ரெட்மி நோட் 11டி 5ஜி- 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா என எல்லாமே வேறலெவல்-விலை இன்னும் குறைவுவந்துருச்சு.,அறிமுகமான ரெட்மி நோட் 11டி 5ஜி- 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா என எல்லாமே வேறலெவல்-விலை இன்னும் குறைவு

 பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படிபிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வா தலைவா., வா தலைவா: மின்சார கார் தயாரிக்கும் சியோமி., ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்- விலை குறைவாகதான் இருக்கும்!வா தலைவா., வா தலைவா: மின்சார கார் தயாரிக்கும் சியோமி., ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்- விலை குறைவாகதான் இருக்கும்!

 பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கால் அழைப்பு நன்மை மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

அவர்களை புறக்கணிப்போம்: பிஎஸ்என்எல்லே துணை- ஜியோ, ஏர்டெல், விஐ விலை உயர்வு விவகாரம்: அணல் பறக்கும் மீம்ஸ்கள்!அவர்களை புறக்கணிப்போம்: பிஎஸ்என்எல்லே துணை- ஜியோ, ஏர்டெல், விஐ விலை உயர்வு விவகாரம்: அணல் பறக்கும் மீம்ஸ்கள்!

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வை அறிவித்தது,அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel, BSNL: Stunning Broadband Plans Available Under Rs.700!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X