Home
News

Jioக்கு டாட்டா! ரூ.200க்கு பிராட்பேண்ட்.. அன்லிமிடெட் டேட்டா.. 350 சேனல்.. 5 மாசம்.. அள்ளி கொடுக்கும் ஏர்டெல்!

அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) உடன் வெறும் ரூ.200 க்குள் ஒரு பிராட்பேண்ட் திட்டம் கிடைக்கும் போது, அதுவும் ஏர்டெல் (Airtel) போன்றதொரு டெலிகாம் ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் போது.. முதல் முறையாக பிராட்பேண்ட் உலகில் அடியெடுத்து வைக்க விரும்பும் பயனர்களுக்கு இதைவிட ஒரு சிறந்த திட்டம் இருக்காது!

ஒருவேளை நீங்கள் பிராட்பேண்ட் சேவைகளை முதல் முறையாக பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, மிகவும் மலிவு விலையில் பேக்கப் பிராட்பேண்ட் (Backup Broadband) திட்டம் ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் கூட ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதென்ன திட்டம்?

ரூ.200க்கு பிராட்பேண்ட்.. அள்ளி கொடுக்கும் ஏர்டெல்!

நாம் இங்கே பேசுவது ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்களை (Airtel Broadband Standby Plans) பற்றித்தான். ஏர்டெல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்கள் ஆனது இரண்டு வகைகளில் வருகின்றன, அதிலொரு திட்டம் ரூ.199 க்கும், மற்றொன்று ரூ.399 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன

ரூ.199 ஏர்டெல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10எம்பிபிஎஸ் (10Mbps) இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். ஏர்டெல்லின் இந்த என்ட்ரி-லெவல் 10எம்பிபிஎஸ் திட்டத்தை (Entry-level 10Mbps Plan) 5 மாதங்களுக்கு தேர்வு செய்யலாம்.

இதற்காக நீங்கள் மொத்தம் ரூ.1,674 செலுத்த வேண்டி இருக்கும். இதில் ரூ.500 என்கிற ஒன்-டைம் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் (One-time installation charges) மற்றும் ஜிஎஸ்டியும் (GST) அடக்கம். ஒருவேளை ரூ.199-ன் நன்மைகள் உங்களை ஈர்க்கும்படி இல்லையென்றால் ஏர்டெல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பையின் கீழ் கிடைக்கும் இரண்டாவது திட்டத்தை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

ரூ.399 ஏர்டெல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இந்த திட்டத்தின் கீழும் 10எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். கூடுதலாக இலவச வைஃபை ரூட்டர் (Free WiFi Router), எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் (Xstream Box) மற்றும் 350-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் (350+ TV Channels) கிடைக்கும். இதுவும் 5 மாத காலத்திற்கு அணுக கிடைக்கும்.

இதற்காக நீங்கள் மொத்தம் ரூ.3000 செலுத்த வேண்டி இருக்கும். இதில் ரூ.500 என்கிற ஒன்-டைம் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் அடக்கம். டேட்டா நன்மைகள் மட்டுமின்றி இவ்விரு பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்களிலும் உள்ள ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் (Unlimited Voice Calls) பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி எந்த நேரத்திலும் நீங்கள் மேலதிக ஸ்பீடை வழங்கும் மற்ற ஏர்டெல் திட்டங்களுக்கு அப்கிரேட் ஆகலாம். நினைவூட்டும் வண்ணம், ஏர்டெல்லின் நுழைவு-நிலை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தின் (Entry-level Airtel Xstream Fiber Plan) விலை ரூ.499 ஆகும். இது 40எம்பிபிஎஸ் (40Mbps) என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.

மற்ற நன்மைகளை பொறுத்தவரை, லேண்ட்லைனை பயன்படுத்தி அன்லிமிட்ட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை (Unlimited Local and STD calls) வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகளும் அணுக கிடைக்கும். கூடுதலாக, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுடன் இலவச வைஃபை ரூட்டர், 1 வருட எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், வின்க் மியூசிக் (Wynk Music) மற்றும் பலவற்றையும் பெறுவார்கள்.

ஏற்கனவே உள்ள வயர்லெஸ் இண்டர்நெட் சேவையில் திருப்தி அடையாத எவருக்குமே ஏர்டெல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்களை நம்பி ரீசார்ஜ் செய்யலாம் அல்லது நீங்கள் ஒரு நம்பகமான ஸ்டான்ட்பை பிராட்பேண்ட் திட்டத்தை மிகவும் மலிவு விலையில் தேடுபவர்களாக இருந்தாலும் கூட இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Broadband Standby Plan Rs 199 and Rs 399 with 10Mbps Speed Unlimited Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X