Home
News

புது 2025 வருடம்.. மறுபடியும் ரூ.599-க்கு 350 டிவி சேனல்கள்.. 30 எம்பிபிஎஸ் டேட்டா.. 20 ஓடிடி ஆப்களின் சந்தா!

பார்தி ஏர்டெல் (Bhari Airtel) கஸ்டமர்களுக்கு 2024ஆம் ஆண்டில் ரீசார்ஜ் கட்டணங்கள் மாற்றப்பட்டன. இருந்தாலும், பிராட்பேண்ட் கட்டணங்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், அடுத்து வரும் 2025ஆம் ஆண்டில் அந்த கட்டணமும் உயருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டும் பிராட்பேண்ட் திட்டங்கள் அதே விலையிலேயே கிடைக்க இருக்கிறது. ரூ.599 மதிப்பிலான மலிவு விலை திட்டத்தில் டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்களை கொடுக்கிறது. இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் (Airtel Broadband Plan) விவரங்கள் இதோ.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களில் டேட்டா மட்டுமல்ல, ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இதனால், ஒரே செலவில் மூன்று சலுகைகளையும் ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், இந்த திட்டங்களில் ஏதாவது மாற்றம் வந்தால், ஒட்டுமொத்த பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கும் சிரமம் இருக்கும்.

புது 2025 வருடம்.. மறுபடியும் ரூ.599-க்கு 350 டிவி சேனல்.. 20 ஓடிடி!

ஆனால், ஏர்டெல் நிறுவனம் 2024ஆம் ஆண்டை போலவே 2025ஆம் ஆண்டிலும் பிராட்பேண்ட் திட்டங்களை (Airtel Broadband Plan) கொடுக்க இருக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு அதிக கஸ்டமர்கள் பெற்று வரும் ரூ.599 மதிப்பிலான திட்டத்தின் சலுகைகளை பார்த்து விடலாம். ஏனென்றால், அடுத்த ஆண்டு புதிதாக வரும் கஸ்டமர்கள் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் இருந்து ஆரம்பிக்க இருக்கலாம்.

இந்த ஏர்டெல் ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்துக்கு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே திட்டம் வழங்கப்படும். ஏனென்றால், இதில் வை-பை ரூட்டர் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதோடு இன்ஸ்டாலேஷனையும் செய்ய வேண்டி இருக்கிறது.

இதனாலேயே, முதல் முறையாக திட்டத்தை பெறும்போது, மூன்று மாதங்களுக்கான தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த மலிவு விலை பிராட்பேண்ட் திட்டத்தை (Affordable Broadband Plan) பெற்ற பிறகு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு 3.3 டிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். டிடிஎச் மூலம் டிவி சேனல்களின் சலுகை கிடைக்கும்.

ஆகவே, 350+ டிவி சேனல்களை இந்த ரூ.599 மதிப்பிலான பிராட்பேண்ட் திட்டத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த டிவி சேனல்கள் போல ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. ஆனால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா மட்டுமே தனியாக கிடைக்கும். மற்ற ஓடிடிகள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

ஆகவே, 20+ ஓடிடி ஆப்களை கஸ்டமர்களால் பயன்படுத்த முடியும். இதில் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), ஃபேன் கோட் (Fan Code), ஹோய்சோய் (HoiChoi), டிவோ (DIVO), ஷீமாரூமீ (Shemaroome), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV) மற்றும் டாகுபே (Docubay) போன்ற ஆப்களும் இந்த சந்தாவில் கிடைக்கும்.

இப்படி ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுக்கிறது. இதேபோல மலிவான விலையில் மற்றொரு பிராட்பேண்ட் திட்டமும் ஏர்டெல்லில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.699ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். மற்ற ஓடிடி, டிவி சேனல்கள் சலுகை முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கும். இவை ரூ.1000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Broadband Plans For 2025 30Mbps Speed Data 350 TV Channels 20 OTT For Rs 599 Affordable Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X