கேபிள் TV-க்கு வந்த வினை.. இனிமே 350+ சேனல்களுடன் 22 ஓடிடி சந்தா.. மலிவு விலை Airtel திட்டம்.. எப்படி பெறுவது?
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு 350-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 22-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாலமல், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையையும் கொடுக்கும்படி மலிவு விலை திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தை எப்படி பெறுவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த வை-பை ரூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் சலுகைகளை கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. இதில் வை-பை டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான டிவைஸ்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். ஆனால், அதற்கு கூடுதல் கட்டணங்கள் இருக்கும். இது முதல் முறை பெறும்போதும் மட்டுமே வசூலிக்கப்படும்.

ஒரு முறை திட்டத்தை பெற்ற பிறகு அந்த திட்டத்தின் விலையிலேயே சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஏர்டெல் வெப்சைட், ஏர்டெல் ஆப் அல்லது அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களில் இந்த திட்டங்களை பெற்று கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கும் இந்த விலைக்கு திட்டம் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் விலை ரூ.599ஆக இருக்கிறது. டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் வை-பை டேட்டாவுடன் மலிவு விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. இந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டி, இன்ஸ்டாலேஷன் போன்ற கட்டணங்களும் முதல்முறை பெறும்போது செலுத்த வேண்டி இருக்கும். இப்போது, இதில் கிடைக்கும் சலுகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.599 டிவி திட்டம் (Airtel Rs.599 TV Plan): இந்த திட்டத்துக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கிடைக்கும். 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் 22-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். இதில் பிரீமியம் ஓடிடி ஆப்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar)மற்றும் ஜீ5 (ZEE5) ஆகியவற்றின் சந்தா கிடைக்கும்.
மேலும், வழக்கமாக கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் மற்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் சோனிலிவ் (SonyLIV), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), ஷீமாரூமீ (ShemarooMe), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra) மற்றும் ஹங்கமா (Hungama) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag) கிடைக்கிறது.
டாகுபே (Docubay), ஹோய்சோய் (HoiChoi), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), சாவ்பால் (Chaupal), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), ஃபேன் கோட் (Fan Code), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play) ஆகிய ஆப்களும் இதில் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன.
ஆகவே, கூகுள் ஒன் (Google One) சலுகை மட்டுமல்லாமல், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகையையும் இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தாவுடன் திட்டம் வேண்டுமானால், இந்த ஏர்டெல் ரூ.599 திட்டத்தை பெற்று கொள்ளலாம். முதல் முறை மட்டுமே கட்டணம் அதிகமாக இருக்கும்.
அதேபோல டிவி சேனல்களுக்கு எச்டி ஆப்ஷன்கள் மற்றும் பிரீமியம் டிவி சேனல்களின் சந்தாவும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் இலவச சேனல்கள் போக கூடுதலாக தேவைப்படும் சேனல்களை கட்டணம் செலுத்தி ஆட் செய்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட கேபிள் டிவிக்கு மாற்றாகவே கிடைப்பதால், அதன் சேவைக்கு போட்டியாகவோ இருக்கிறது.


Click it and Unblock the Notifications








