ஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது, குறிப்பாக ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறவிப்கை வெளியிட்டது அந்நிறுவனம்.

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது, குறிப்பாக ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறவிப்கை வெளியிட்டது அந்நிறுவனம். இதற்கு பதிலடி தரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது.

ஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.!

அதன்படி இதன் முதற்கட்டமாக ஜதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது, மேலும் ஜியோ பிராட்பேண்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் எனத் தெரிவித்த நிலையில், மற்ற நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.349-விலையில்

ரூ.349-விலையில்

தற்சமயம் ஜதராபாத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349-விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிராட்பேண்ட் சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 20சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சென்னை?

சென்னை?

ஜதராபாத்தில் வழங்கப்பட்ட இந்த சலுகை மற்ற நகரங்களில் ஏர்டெல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில்
தற்சமயம் ரூ.999 விலையில் 300ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கிவருகிறது.

டவுன்லோடு வேகம்:

டவுன்லோடு வேகம்:

குறிப்பாக ஜதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு 8Mbps வேகத்திலும் பின்பு ரூ.1,299 சேவையில் 100Mbps வேகத்திலும் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வேகத்தில் ஆடியோ, வீடியோ, மின்னஞ்சல் போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியும்.

ஜியோவின் ஜிகாஃபைபர் சேவை:

ஜியோவின் ஜிகாஃபைபர் சேவை:

ஆகஸ்ட் மாதம் 15-தேத முதல் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 அன்லிமிட்டெட் டேட்டா சலுகை:

அன்லிமிட்டெட் டேட்டா சலுகை:

தற்சமயம் வரை ஏர்டெல் நிறுவனம் ஐதராபாத்தில் அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. மேலும் கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்கும் பயனர்களுக்கு 20சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Broadband Plan FUP Limits Removed in Select Cities to Take On Jio GigaFiber: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X