Home
News

Airtel வழங்கும் 3.3TB ஆட் ஆன் டேட்டா நன்மை வெறும் ரூ.299 மட்டுமே! ப்ரீபெய்ட் & போஸ்ட்பெய்ட் ஓரம்போ!

இணைய சேவை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. இணையச் சேவை இல்லாமல் போய்விட்டாள், பல மக்களின் பணிகள் நின்றுவிடும். இணையச் சேவையின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகம் தேவைப்படுகிறது.

மலிவான விலையில் அதிக டேட்டா

மலிவான விலையில் அதிக டேட்டா

டிஜிட்டல் மயமாக மாறிவிட இந்த உலகத்தில் பல சேவைகளை அணுகுவதற்கு மக்களுக்கு இணையச் சேவை அதிகம் தேவைப்படுகிறது. அதிக தேவைக்கு ஏற்றார் போல் சரியான டேட்டா திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நமது கையில் தான் உள்ளது. மலிவான விலையில் அதிக டேட்டா நன்மை தேடி திரியும் பயனர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஓரம்போ

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஓரம்போ

என்னதான் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் டேட்டா திட்டங்கள் பல நன்மைகளை வழங்கினாலும், அவை பிராட்பேண்ட் திட்டங்கள் அளவிற்கு நெகிழ்வுத்தன்மையை இன்னும் வழங்கவில்லை. ஏர்டெல் டெலிகாம் சந்தையில் சிறிது காலத்திற்கு முன்பு, அதன் ஃபைபர் சேவைகளையும் அறிமுகப்படுத்தியது. மிக விரைவில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்புகள் இந்தியா முழுவதும் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள் ரூ.799, ரூ.999, ரூ.1,499 மற்றும் ரூ.3999 என்ற விலையில் நான்கு திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.3999 பிராட்பேண்ட் திட்டம் மற்ற திட்டங்களைப் போல் இல்லாமல் எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற தரவு நன்மையை வழங்குகிறது. அதேபோல், மலிவான விலையில் அன்லிமிடெட் நன்மை வேண்டும் என்ற பயனர்கள் ஏர்டெல்லின் ஆலிமிடெட் ஆட் ஆன் திட்டமான ரூ.299 திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ 299 ஆலிமிடெட் ஆட் ஆன் திட்டம்

ஏர்டெல் ரூ 299 ஆலிமிடெட் ஆட் ஆன் திட்டம்

நீங்கள் FUP வரம்பை அடைந்துவிட்டால், உங்களிடம் அதிவேக தரவு இல்லை என்றால், நீங்கள் ஏர்டெல்லிலிருந்து கூடுதல் வரம்பற்ற தரவு திட்டத்தைப் பெற இந்த ரூ.299 திட்டத்தை பயன்படுத்தலாம். இந்த திட்டம் வரம்பற்ற தரவை அதிக வேகத்தில் வழங்குகிறது.

அன்லிமிடெட் டேட்டா தான் ஆனாலும் ஒரு சூட்சுமம் உள்ளது

அன்லிமிடெட் டேட்டா தான் ஆனாலும் ஒரு சூட்சுமம் உள்ளது

வரம்பற்ற தரவு நன்மை என்று ஏர்டெல் தெரிவித்திருந்தாலும் கூட இந்த அன்லிமிடெட் டேட்டா நன்மை திட்டத்திற்கும் மறைமுகமாக ஒரு வரம்பை ஏர்டெல் நிறுவனம் நியமித்துள்ளது. இந்த அன்லிமிடெட் டேட்டா நன்மை கொண்ட திட்டத்தின் கீழ் பயனர்களுக்குவரம்பு டேட்டாவாக 3.3TB டேட்டா மட்டுமே வழங்குகிறது. உண்மையில் இது நம்மில் பெரும்பான்மையினருக்கு போதுமானது தான் என்பதில் சந்தேகமில்லை.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799 - அடிப்படை திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799 - அடிப்படை திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் மலிவான திட்டம் ரூ.799 திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், 150 ஜிபி டேட்டா நன்மையை 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பயன்படுத்தலாம். இத்துடன் வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாவின் நன்மையையும் பெறுவீர்கள். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் நீங்கள் கூடுதல் நன்மைகளையும் பெறலாம். உங்கள் அதிவேக 150 ஜிபி தரவு தீர்ந்த பிறகு, வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 999 - என்டர்டைன்மெண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 999 - என்டர்டைன்மெண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இரண்டாவது திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் கீழ் 300 ஜிபி டேட்டா நன்மை 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன், வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளான அமேசான் பிரைம் , ZEE5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் சந்தாவும் கிடைக்கிறது.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ.1,499 - பிரீமியம் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ.1,499 - பிரீமியம் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் மூன்றாவது திட்டம் ரூ.1,499 விலை கொண்ட பிரீமியம் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளான அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய இலவச சந்தாக்களும் கிடைக்கிறது.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 3,999 - விஐபி திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 3,999 - விஐபி திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்டில் இறுதியான இந்த திட்டமே மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். இந்த விஐபி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது.

கூடுதல் விஐபி நன்மைகள்

கூடுதல் விஐபி நன்மைகள்

இத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளான அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற டேட்டா நன்மை என்பது 3.3TB டேட்டா அளவை குறிக்கிறது, அதற்குப் பிறகு உங்கள் வேகம் குறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Airtel Broadband Offers 3.3TB Add-On Data Benefit For Just Rs 299 Only : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X