Just In
- 6 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 8 min ago
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- 2 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- 4 hrs ago
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுக தேதி இதுதான்.!
Don't Miss
- News
பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Movies
Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
- Finance
3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது உலகத்திலேயே ரொம்ப பெருசு.! ஆழ்கடல் வழியாக Jio-வுக்கு செக் வைத்த Airtel.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.!
முன்னணி நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), மெட்டா (Meta) மற்றும் எஸ்டிசி (STC) ஆகியவை 'இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழலை வலுப்படுத்த' (strengthen the digital ecosystem of India) இப்போது ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. இதற்காக உலகின் மிகப்பெரிய சப்சீ கேபிள் (Subsea cable system) - அதாவது, ஆழ்கடல் கேபிள் அமைப்பான 2ஆப்பிரிக்கா பெர்ல்ஸ் (2Africa Pearls) அமைப்பை இந்தியாவிற்குள் கொண்டுவந்துள்ளதாக சமீபத்திய அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

எந்தவொரு டெலிகாம் ஆப்ரேட்டரும் செய்யாத வேலையை செய்த ஏர்டெல்.!
இதுவரை, இந்தியாவின் எந்தவொரு டெலிகாம் ஆப்ரேட்டரும் செய்யாத வேலையை இப்போது ஏர்டெல் செய்துள்ளது.
மும்பையில் அமைந்துள்ள ஏர்டெல்லின் லேண்டிங் நிலையம் (Airtel Landing Station) வரை இந்த கேபிள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் கருத்துப்படி, இது நாட்டின் கேபிள் திறனைக் கணிசமாக உயர்த்தும் (boost nation's cable capacity), நுகர்வோருக்குத் தடையற்ற இணைப்பை வழங்கும், புதிய ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்க இது வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழலை வலுப்படுத்த ஏர்டெல் முடிவு.!
இந்தியாவில் திறந்த ரான் (RAN) நெட்வொர்க்கின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க ஏர்டெல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
AI/ML மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு மூலம் ஆற்றல் மேலாண்மை மற்றும் ரேடியோ நெட்வொர்க்குகளின் ஆட்டோமேஷனை நிறுவனம் எளிதாக்குகிறது.
இது உண்மையிலேயே இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழலை வலுப்படுத்தப் பெரிதும் உதவப்போகிறது.

ஓபன் RAN சோதனைகளை Airtel நடத்தி வருகிறதா?
ஏர்டெல் தற்போது ஹரியானா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) அடிப்படையிலான ஓபன் RAN தீர்வுகளுக்கான சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும் திறந்த RAN அடிப்படையிலான நெட்வொர்க்குகள் வரும் 2023 ஆம் ஆண்டின் காலாண்டுகளில் நாடு முழுவதும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் மிகவும் வேகமாகவும், மும்முரமாகவும் வேலை செய்து வருகிறது.

இந்தியாவில் இனி ஏர்டெல் நெட்வொர்க் சும்மா அசுர வேகத்தில் மாறப்போகிறது.!
ஏர்டெல் மற்றும் மெட்டா ஆகியவை டெலிகாம் இன்ஃப்ரா ப்ராஜெக்ட் (Telecom Infra Project) மற்றும் ஓபன் ரான் ப்ராஜெக்ட் (Open RAN project) குழுவில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு பன்முகத்தன்மையை அதிகரிப்பது, புதுமைகளை மேம்படுத்துதல் மற்றும் நெட்வொர்க்குகள் முழுவதும் செலவுத் திறனை அதிகரிப்பது போன்ற பொதுவான இலக்கைக் கொண்டுள்ளன.

உலகின் முதல் நெட்வொர்க் காம்ஸ் தளத்தை உருவாக்குகிறதா Airtel.!
உலகின் முதல் நெட்வொர்க் - உட்பொதிக்கப்பட்ட காம்ஸ் தளமான (world's first network-embedded comms platform) ஏர்டெல் ஐக்யூவில் (Airtel IQ) வாட்ஸ்அப்பை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஏர்டெல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஒருங்கிணைப்பு வணிகங்கள் வாட்ஸ்அப்பின் (WhatsApp) சிறந்த அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் மற்றும் நிறுவனங்களுக்கு சர்வ சாதாரண வாடிக்கையாளர் ஈடுபாட்டை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி என்ன கூறுகிறார்?
பார்தி ஏர்டெல் குளோபல் பிசினஸின் தலைமை நிர்வாக அதிகாரி வாணி வெங்கடேஷ் கூறுகையில், "இரு நிறுவனங்களின் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு பலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் இணைக்கப்பட்ட பொருளாதாரத்திற்குச் சேவை செய்ய மெட்டாவுடனான எங்கள் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று கூறியுள்ளார்.

2 ஆப்பிரிக்கா கேபிள் சிஸ்டம் மற்றும் ஓபன் RAN மூலம் ஏர்டெல் ஜியோவிற்கு செக் வைக்க பார்க்கிறதா?
மறுபுறம், வாணி வெங்கடேஷ் மேலும் கூறுகையில், "2 ஆப்பிரிக்கா கேபிள் மற்றும் ஓபன் RANக்கான எங்கள் பங்களிப்புகளுடன், இந்தியாவில் அதிவேக டேட்டாவுக்கான அதிகரித்து வரும் தேவையை ஆதரிக்கத் தேவையான முக்கியமான மற்றும் முற்போக்கான இணைப்பு உள்கட்டமைப்பில் நாங்கள் முதலீடு செய்கிறோம்.

'இந்த' முயற்சியால் மக்கள் கூட்டம் ஏர்டெல் பக்கம் படை எடுக்குமா?
இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க மெட்டாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த நெட்வொர்க் எங்கிருக்கிறதோ, அங்கு மக்கள் கூட்டம் தானாக படை எடுக்க துவங்கிவிடும் என்பதை நன்கு அறிந்த ஏர்டெல் நிறுவனம், இந்த முயற்சியை முயன்றுள்ளது போல தெரிகிறது. இதன் மூலம் ஜியோவின் நிலைமை என்னவாகும் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470