அடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்

|

ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் பல்வேறு வகை வாடிக்கையாளர்களுக்கும் பெரிதளவு உதவியாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

மினிமம் ரீசார்ஜ் திட்டம் உயர்வு

மினிமம் ரீசார்ஜ் திட்டம் உயர்வு

சமீபத்தில், மினிமம் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 23 ரூபாயிலிருந்து தற்சமயம் 45ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 45ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தைச் செலுத்துவது கட்டாயம் ஆக்கியது.

28 நாட்களுக்கான சேவை வழங்கப்படும்

28 நாட்களுக்கான சேவை வழங்கப்படும்

நீங்கள் 45 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதி ஏர்டெல் மற்றும் பாரதி ஹெக்சாகாம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அத்தனைப் பேருக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும்.

ரூ.349 வேலிடிட்டி 28 நாட்கள்

ரூ.349 வேலிடிட்டி 28 நாட்கள்

வேலிடிட்டி 28நாட்கள் பாரதி ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசிர 2ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் இந்த ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் 56ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை பெறமுடியும்.

ஏர்டெல் தற்போது அறிமுகப்படுத்திய திட்டம்

ஏர்டெல் தற்போது அறிமுகப்படுத்திய திட்டம்

பாரதி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவை ரூ. 279 மற்றும் ரூ. 379 திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களானது அதிவேக தரவு மற்றும் எஸ்எம்எஸ் செய்தி நன்மைகளுடன் வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் விங்க் மியூசிக் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இதில் ரூ. 279 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் எச்.டி.எஃப்.சி லைப்பில் இருந்து 4 லட்சம் ஆயுள் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது.

கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.! எவ்வளவு தெரியுமா?கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.! எவ்வளவு தெரியுமா?

ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

ஏர்டெல் இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ. 279 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக தரவு வழங்கப்படுகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை, வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ. 379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 6 ஜிபி அதிவேக தரவு அணுகல், 1000 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஷா அகாடமி, விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பயன்பாடுகளை நான்கு வாரங்களுக்கு வழங்குகிறது.

ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

ரூ.379 திட்டத்திற்கு 6 ஜிபி டேட்டாவையும், 900 எஸ்.எம்.எஸ்களை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குவதோடு, பாஸ்ட் டேக் சலுகைக்கு ரூ.100 கேஷ்பேக் வசதியும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Brings two new recharge plans up to 84 validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X