Home
News

Airtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா? ஜியோவை மிஞ்சிய திட்டம்!

முன்னெப்போதையும் விட இப்போது மக்களுக்கு அதிகமான தரவு தேவைப்படுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் தங்களை மகிழ்விக்க அதிக ஆன்லைன் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள். மக்களின் அதிக தரவு தேவையைப் பூர்த்தி செய்ய ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா வவுச்சர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அன்லிமிடெட் டேட்டா திட்டம்

அன்லிமிடெட் டேட்டா திட்டம்

வீடுகளில் சிக்கித் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற இணைய அனுபவம் கிடைப்பதை உறுதிசெய்ய டெல்கோஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது . ஏர்டெல்லிலிருந்து கிடைக்கப்பெறும் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டம் தினசரி தரவுகளுக்கான ஒரு FUP வரம்பைக் கொண்டுள்ளது, வரம்பு முடிந்தபின் பயனர்கள் மீண்டும் அதிவேக இணையச் சேவையை அணுக நாள் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.

புதிய 4 ஜி டேட்டா வவுச்சர்

புதிய 4 ஜி டேட்டா வவுச்சர்

இந்த சிக்கலை தீர்க்க ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பிற டெல்கோக்கள் 4 ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தன. இந்த டேட்டா வவுச்சர்களைப் பயன்படுத்தி, உங்கள் அடிப்படை திட்டத்தின் மேல் கூடுதல் டேட்டா நன்மையை நீங்கள் அணுகலாம். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள, பாரதி ஏர்டெல் இப்போது தனது டேட்டா வவுச்சர் திட்டங்களில் கூடுதலாக ரூ.251 என்ற புதிய டேட்டா வவுச்சரைக் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ .251

ஏர்டெல் 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ .251

பாரதி ஏர்டெல் புதிய 4 ஜி டேட்டா வவுச்சரை ரூ.251 என்ற விலையில் வழங்குகிறது. இந்த டேட்டா வவுச்சர் 50 ஜிபி வரம்பற்ற அதிவேக டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோ வவுச்சரை போல் இல்லாமல், ஏர்டெல் வவுச்சரின் செல்லுபடி காலம் பயனரின் அடிப்படை திட்டத்தைப் பொருந்தியே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய அடிப்படை திட்டம் என்ன செல்லுபடியாகும் காலத்தில் உள்ளதோ அதே செல்லுபடியை உங்கள் டேட்டா வவுச்சரும் பெரும் என்பது பொருள்.

செல்லுபடியாகும் காலம் எப்படி செயல்படும்?

செல்லுபடியாகும் காலம் எப்படி செயல்படும்?

உதாரணத்திற்கு, உங்களுடைய அடிப்படை திட்டம் ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும் என்றால், அதன் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பயன்படுத்தும் நேரம் வரை, உங்களுடைய டேட்டா வவுச்சரும் அதே செல்லுபடியாகும் காலத்துடன் ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும். ஒருவேளை, உங்கள் அடிப்படை திட்டம் அடுத்த வரத்துடன் நிறுவைடைகிறது என்றால், டேட்டா வவுச்சரை வாங்க முடிவு செய்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஏர்டெல் 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.98 வேலிடிட்டி திருத்தம்

ஏர்டெல் 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.98 வேலிடிட்டி திருத்தம்

ஏர்டெல் தனது ரூ.98 டேட்டா வவுச்சரை சில காலமாக வழங்கி வருகிறது. முன்னதாக, இந்த வவுச்சர் ஒரு முழுமையான செல்லுபடியாகும் காலத்துடன் 6 ஜிபி வரையிலான அதிவேக தரவை மட்டுமே வழங்கியது. ஆனால் இனி அப்படி இல்லை, ஏர்டெல் இனி இத்திட்டத்தை உங்கள் அடிப்படை திட்டத்தின் அதே செல்லுபடியாகும் காலத்துடன் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் , திட்டத்துடன் 12 ஜிபி அதிகரித்த தரவு நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.251

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.251

ஏர்டெலுக்கு முன்பு, ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ' வொர்க் ஃப்ரம் ஹோம் ' சலுகையின் கீழ் ரூ.251 என்ற 4 ஜி டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியது . இந்த ரூ.251 டேட்டா வவுச்சரும் அதே 50 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் வவுச்சர்களுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது. இரண்டு வவுச்சர்களுக்கு இடையில் உள்ள முக்கிய வித்தியாசம் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் தான்.

ஜியோவை மிஞ்சிய ஏர்டெல் திட்டம்

ஜியோவை மிஞ்சிய ஏர்டெல் திட்டம்

ஜியோவிலிருந்து கிடைக்கும் டேட்டா வவுச்சர் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. எனவே நீங்கள் இந்த டேட்டா வவுச்சரை வாங்கிய நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு மட்டுமே இத்திட்டம் செல்லுபடியாகும், பிறகு தரவின் அனைத்து நன்மைகளும் முடிந்துவிடும். ஆனால், ஏர்டெல்லிலிருந்து கிடைக்கும் டேட்டா வவுச்சர்கள் பயனர்களின் அடிப்படை திட்டத்தைப் போலவே வவுச்சரின் செல்லுபடியையும் வழங்குகிறது என்பதால் இதில் கூடுதல் பயன் உள்ளது.

வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியாவைப் பொறுத்தவரை, டெல்கோ இன்னும் ஜியோ, ஏர்டெல் போன்ற எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. வோடபோனிலிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த டேட்டா வவுச்சர் திட்டம் ரூ.98 மதிப்பிலான 4 ஜி டேட்டா வவுச்சர் தான். இது உங்கள் அடிப்படை திட்டத்தின் மேல் 6 ஜிபி அதிவேக தரவுகளின் நன்மையை வழங்குகிறது. ஆனால், ஏர்டெல் இதே விலையில் இரட்டிப்பான தரவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Brings Rs 251 Data Voucher With 50 GB Hi Speed Data Benefit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X