ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்!

|

ஜூம் வீடியோ கான்பிரன்சிங் பயன்பாட்டிற்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் கூகிள் மீட்ஸ் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. ஜியோ நிறுவனமும் தனது பங்கிற்கு ஜியோமீட் என்ற வீடியோ சேவையை அறிமுகம் செய்தது. தற்பொழுது இந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வீடியோ கான்பிரன்சிங் சேவைக்கான ப்ளுஜீன்ஸ் என்ற புதிய பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயன்பாடு பற்றிய முழு விபரங்களைப் பார்க்கலாம்.

வீடியோ கான்பரன்சிங்

இந்தியாவில் தனது வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம், வெரிசோன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 'ப்ளூஜீன்ஸ்' என்ற ஒரு வீடியோ கான்ஃபரென்சிங் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல்லின் இந்த புதிய வீடியோ கான்பரன்சிங் சேவை, ஏர்டெல் பயனர்கள் அனைவர்க்கும் கிடைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ போல் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்காது.

ப்ளூஜீன்ஸ்

ப்ளூஜீன்ஸ் வீடியோ கான்பரன்சிங் தளம் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பயனர்களுக்கு வெளியிடவில்லை. இருப்பினும் இது ஏர்டெல்லின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, துவக்கக் காலத்தில் இலவச சோதனை சலுகையுடன் 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இது இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. ஏர்டெல் தனது வீடியோ சேவைக்கான தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!

என்க்ரிப்ஷன்

ஏர்டெலின் ப்ளூஜீன்ஸ் வீடியோ கான்பிரன்சிங் தளத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வீடியோ அழைப்புகளும் AES-256 GCM என்க்ரிப்ஷன் மூலம் என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. மீட்டிங்-களுக்கான டூ-ஸ்டேப் வெரிஃபிகேஷன் அங்கீகாரத்தையும் ஏர்டெல் வழங்கியுள்ளது. ப்ளூஜீன்ஸ் பயனர்களின் அனைத்து தரவுகளும் உள்நாட்டிலேயே சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவிலேயே சேமிக்கப்படும்.

HD தர வீடியோ

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ளூஜீன்ஸ் பயன்பாடு டால்பி குரல் ஆதரவுடன் HD தர வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது. மீட்டிங்கைத் திட்டமிட, சேர மற்றும் ஹோஸ்ட் செய்ய இது ஒன்-டச் அக்சஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ப்ளூஜீன்ஸில் புதிதாக ‘ஸ்மார்ட் மீட்டிங்ஸ்' என்ற அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூம் போலவே, வீடியோ கான்பரன்சிங் காத்திருப்பு அறையும் இதில் உள்ளது, இது பங்கேற்பாளர்களுக்கு ஹோஸ்ட்களுக்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.

நேரடி போட்டி

ஜூம், கூகுள் மீட், ஜியோ மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற பிற வீடியோ கான்பிரன்சிங் பயன்பாடுகளுடன் நேரடி போட்டியில் ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது களமிறங்கியுள்ளது. இருப்பினும் ஏர்டெல் நிறுவனம் வீடியோ கான்பரன்சிங் பிரிவில் தாமதமாகத் தான் களமிறங்கியுள்ளது என்பதே உண்மை. இதன் சேவை வெளியிட்ட பின்னர் இதன் தரத்தைப் பார்த்துவிட்டு நாம் ஒரு முடிவிற்கு வரலாம். அதுவரை ப்ளூஜீன்ஸ் இன் வெளியீட்டிற்காகக் காத்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Airtel BlueJeans Video Conferencing Platform Comes With Strong Encryption And Authentication : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X