Jio பயனர்களுக்கே ஷாக் கொடுத்த Airtel திட்டம்.. 12+ OTT.. DTH எல்லாமே இலவசம்.. கம்மி காசில் அல்டிமேட் நன்மை..
உங்கள் வீட்டிற்கு தேவையான வைஃபை (WiFi), ஓடிடி (OTT), டிடிஎச் (DTH) மற்றும் லேண்ட்லைன் (Landline) போன்ற சேவைகளை ஒட்டுமொத்தமாக குறைந்த விலையில் அனுபவிக்க ஆசை என்றால், கட்டாயம் நீங்கள் இந்த ஏர்டெல் பிளாக் (Airtel Black Plan) திட்டங்களை பார்க்கவேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு பல விதமான திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் காம்போ பேக் ஆக, அணைத்து டெலிகாம் சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை ஒன்றாக இணைத்து ஒரே பேக்கில் வழங்கும் சேவை தான் ஏர்டெல் பிளாக் சேவையாகும். ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பில்களை வழங்காமல், எல்லா சேவைக்கும் சேர்த்து ஒரே பில்லை இந்த ஏர்டெல் பிளாக் வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் சேவை
பார்தி ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் பிளாக் எனப்படும் தொகுக்கப்பட்ட சேவையை வழங்கி, அதன் பயனர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. ஏர்டெல் பிளாக் சேவையானது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏர்டெல் ஒன் (ஏர்டெல்லிலிருந்து பீட்டா தொகுக்கப்பட்ட சேவை) சோதனைக்குப் பிறகு PAN-இந்தியா சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏர்டெல் பிளாக் (Airtel Black) பல அட்டகாசமான திட்டங்களை கொண்டுள்ளது. இதில் குறைந்த விலையில் அல்டிமேட் நன்மைகளை வழங்கும் திட்டமாக ரூ.1099 திட்டம் திகழ்கிறது. இந்த திட்டமானது, அதன் பயனர்களுக்கு DTH (Direct-to-Home), ஃபைபர் (Fiber) மற்றும் OTT சந்தாக்களை ஒரே பேக்கின் கீழ் வழங்குகிறது.
பார்தி ஏர்டெல்லின் ரூ.1099 திட்டம் ஒரு வாடிக்கையாளருக்கு மிகவும் விலை உயர்ந்ததாகத் தோன்றலாம், குறிப்பாக வரிகள் உட்பட இறுதி விலையுடன் வரும்போது, இது மாதத்திற்கு ரூ.1300 விலையை நெருங்குகிறது. இருப்பினும், இது வாடிக்கையாளர்களின் முக்கிய தேவைகளை செமையாக தீர்க்கிறது. சரி, இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாமா?

ஏர்டெல் பிளாக் ரூ 1099 திட்டம்
ஏர்டெல் பிளாக்கின் ரூ.1099 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மூன்று விஷயங்களைத் தொகுத்து வழங்குகிறது. இது ஃபைபர் + DTH + OTT நன்மைகளை வழங்குகிறது. ஃபைபர் இணைப்பு உள்ளதால், நீங்கள் லேண்ட்லைன் இணைப்பையும் கூடுதலாக தேவையெனில் பெறலாம். ஆனால், இதற்கான சாதனத்தை நீங்களே பெற வேண்டும்.
இந்தத் திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படும் ஃபைபர் இணைப்பு 200 Mbps வேகத்துடன் மற்றும் மாதத்திற்கு 3.3TB டேட்டாவுடன் வருகிறது. பார்தி ஏர்டெல் இந்த திட்டத்துடன் 200 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. ஏர்டெல் 200 எம்பிபிஎஸ் திட்டம் ரூ. 999 விலையில் துவங்குகிறது. நாம் இங்கு பார்க்கும் ஏர்டெல் பிளாக் திட்டம், ஏர்டெல் திட்டத்தை விட ரூ.100 அதிகமானது.
12+ வகையான OTT சேனல் இலவசம்
இருப்பினும், இதில் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு DTH இணைப்பும் கிடைக்கும். ரூ.350 மதிப்புள்ள டிடிஎச் இணைப்புடன் டிவி சேனல்களுடன் வருகிறது. 12+ வகையான OTT சேனல் நன்மையும் இத்துடன் வருகிறது. இதன் மூலம் உங்கள் பொழுதுபோக்கு பயணத்தை மற்றொரு நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ் போன்ற ஆப்ஸ்/பிளாட்ஃபார்ம்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள், இது ஒரே லாக்-இன் மூலம் பயனருக்கான 12+ OTT இயங்குதளங்களைத் தொகுத்து வழங்குகிறது. நீங்கள் 4000 ரூபாய் முன்பணம் செலுத்தினால், நிறுவனத்திடமிருந்து அனைத்து ஹார்டுவேர்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான இன்ஸ்டாலேஷனை நீங்கள் முற்றிலும் இலவசமாகப் பெறுவீர்கள். உங்கள் எதிர்கால பில்களில் இருந்து தொகை சரிசெய்யப்படும். இந்த வழியில், ஏர்டெல் வாடிக்கையாளரை அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் நிறுவனம் லாக் செய்துகொள்கிறது. ஏர்டெல் பிளாக் பல சேவைகளுக்கு பல பில்களை விரும்பாதவர்களுக்கு சிறந்த சேவையாகும். எந்த கட்டணமும் செலுத்தாமல் எந்த நேரத்திலும் சேவையிலிருந்து வெளியேறலாம் என்பதை நினைவில் கொள்ளவும். உண்மையில் இது ஒரு பெஸ்ட் ஆள்-இன்-ஒன் ரீசார்ஜ் திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








