'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..

|

சில மாதங்களுக்கு முன், பாரதி ஏர்டெல் நிறுவனம், 'ஏர்டெல் பிளாக்' என்ற புதிய தொகுக்கப்பட்ட சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் என்று சொன்னதும், சிவப்பு பேக் கிரௌண்டில் வெள்ளை நிறத்தில் ஏர்டெல் லோகோ உங்களின் கண்களுக்கு வந்து மறையும். ஆனால், இனி அப்படி இல்லை, காரணம் ஏர்டெல் நிறுவனம் புதிதாக ஏர்டெல் பிளாக் என்ற சேவையை அறிமுகம் செய்து அதன் பயனர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. ஏனெனில், இந்த புதிய ஏர்டெல் பிளாக் சேவை உங்களுக்குப் பல தொகுக்கப்பட்ட சேவையை ஒரே கட்டணத்தின் கீழ் வழங்குகிறது.

'ஏர்டெல் பிளாக்' என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

'ஏர்டெல் பிளாக்' என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

எளிமையான வார்த்தைகளில், ஏர்டெல் பிளாக் என்பது பல சேவை ஒரு கட்டணம் என்று செயல்படும் ஒரு திட்டமாகும். இதன் கீழ் ஏர்டெல் பல சேவைகளை ஒருங்கிணைக்கிறது, இதில் டைரக்ட்-டு-ஹோம் (டிடிஎச்) சேவை, பிராட்பேண்ட் சேவை மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் சேவை போன்ற பல சேவைகளைப் பயனர்கள் ஒரே திட்டமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது பல சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் ஒரே பில்லின் கீழ் எல்லாவற்றிற்கும் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

மலிவான ஏர்டெல் திட்டத்தின் சிறப்பு என்ன?

மலிவான ஏர்டெல் திட்டத்தின் சிறப்பு என்ன?

இத்துடன் இதில் பயனர்கள் பணத்தை மிச்சம் பிடிக்கவும் வழியுள்ளது. இப்போது, ஏர்டெல் பிளாக் சேவையின் ஒரு நன்மை என்னவென்றால், பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் போஸ்ட்பெய்ட் அல்லது நிறுவனத்திடமிருந்து புதிய போஸ்ட்பெய்ட் சந்தாவை வாங்கத் திட்டமிட்டிருக்கும் பயனர்களுக்கு, மேலே குறிப்பிட்டுள்ள சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி தங்கள் விருப்பப்படி ஒரு திட்டத்துடன் இணைத்துக்கொள்ளலாம். தற்போது கிடைக்கும் மிகவும் மலிவான ஏர்டெல் பிளாக் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..

ரூ. 998 விலையில் ஏர்டெல் பிளாக் மலிவு திட்டம்

ரூ. 998 விலையில் ஏர்டெல் பிளாக் மலிவு திட்டம்

ஏர்டெல் பிளாக் சேவையின் கீழ் கிடைக்கும் மிகவும் மலிவான திட்டம் என்றால் அது இந்த ரூ. 998 திட்டம் மட்டும் தான். இது பாரதி ஏர்டெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நுழைவு நிலை திட்டமாகும். ஏர்டெல் பிளாக் திட்டத்தைக் கையாள்வதில் நீங்கள் சிரமப்பட விரும்பவில்லை என்றால், ஆரம்பத்தில் பாரதி ஏர்டெல்லின் இந்த நுழைவு நிலைத் திட்டத்துடன் நீங்கள் முயலலாம். இந்த திட்டம் பிராட்பேண்ட் சேவைகளைத் தொகுக்காது என்பதை நினைவில் கொள்க. இந்த திட்டம் ஒரு போஸ்ட்பெய்டு மற்றும் நிறுவனத்தின் DTH இணைப்புடன் வருகிறது.

105 ஜிபி வரை டேட்டா நன்மை.. அன்லிமிடெட் அழைப்பு நன்மை.. இன்னும் ஏராளம்

105 ஜிபி வரை டேட்டா நன்மை.. அன்லிமிடெட் அழைப்பு நன்மை.. இன்னும் ஏராளம்

இந்தத் திட்டத்தால் வழங்கப்படும் போஸ்ட்பெய்ட் இணைப்பில் ஒரு முதன்மை இணைப்பு மற்றும் கூடுதல் இணைப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது. போஸ்ட்பெய்ட் இணைப்பிற்கென்று வழங்கப்படும் தரவு அளவு 105 ஜிபி ஆக இருக்கிறது. மேலும், பயனர்கள் நிறுவனத்திடமிருந்து வரம்பற்ற குரல் அழைப்பைப் பெறுகிறார்கள். போஸ்ட்பெய்ட் இணைப்புகள் புதியதாகவோ அல்லது இருக்கும் எண்களாகவோ இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், உங்களுக்கு டிடிஎச் இணைப்பும் கிடைக்கிறது.

நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..

ரூ. 998 திட்டத்தில் ரூ. 350 மதிப்பிலான DTH சேனல்கள் கிடைக்கிறதா?

ரூ. 998 திட்டத்தில் ரூ. 350 மதிப்பிலான DTH சேனல்கள் கிடைக்கிறதா?

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் DTH நன்மையில் பயனர்களுக்கு ரூ. 350 மதிப்பிலான சேனல்கள் எந்த கூடுதல் செலவுகளும் இல்லாமல் இந்த திட்டத்துடன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. பாரதி ஏர்டெல் பயனர்களுக்கு இந்த திட்டத்துடன் சேர்த்து ஏர்டெல் XStream பாக்ஸ் விருப்பமும் கிடைக்கும். இத்துடன் கூடுதலாக, பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியின் ஒரு வருடத்திற்கான இலவச நன்மைகளைப் பெறவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் நிறுவனம் ஒரே திட்டத்தில் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல் பிளாக்

30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல் பிளாக்

தற்போது பயனர்கள் ஏர்டெல் பிளாக் திட்டத்துடன் கிடைக்கும் சந்தாவில், வேறு எந்த சேவையையும் சேர்க்க விரும்பும் பட்சத்தில் அதற்கும் நிறுவனம் கூடுதல் இலவச நன்மையை வழங்குகிறது. தற்போதுள்ள சேவையுடன் பயனர்கள் புதிதாக வேறு ஏதேனும் சேவையைச் சேர்க்கும் போது, அந்த சேவை ஒரு மாதம் அல்லது 30 நாட்களுக்கு இலவச சேவையாக வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன் படி, நீங்கள் பிராட்பேண்ட் அல்லது DTH சேவையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றும் நேரம்: ஸ்மார்ட்ஹோம் சாதனங்களுக்கு அமேசானில் 66% தள்ளுபடி!வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றும் நேரம்: ஸ்மார்ட்ஹோம் சாதனங்களுக்கு அமேசானில் 66% தள்ளுபடி!

இது யாருக்கெல்லாம் பொருந்தும்?

இது யாருக்கெல்லாம் பொருந்தும்?

இதன் பொருள் நீங்கள் ஏற்கனவே பாரதி ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் பயனராக இருந்தால், ஏர்டெல் பிளாக் கீழ் பிராட்பேண்ட் அல்லது டிடிஎச் சேவையை நீங்களே சேர்த்து ஒரு மாதத்திற்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பாரதி ஏர்டெல் ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்களுக்கு ஐவிஆர் காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் அர்ப்பணிப்பு உறவு குழுவுடன் தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் கீழ் கிடைக்கும் மற்ற திட்டங்கள்

ஏர்டெல் பிளாக் கீழ் கிடைக்கும் மற்ற திட்டங்கள்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திட்டத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் ஏர்டெல் பிளாக் சேவையை நிறுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் இன்னும் ஏராளமான ஏர்டெல் பிளாக் திட்டங்களை வெவ்வேறு நன்மைகளுடன் வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்த விலையில் கிடைக்கும் சரியான திட்டத்தைத் தேர்வு செய்து, ஒரே கட்டணத்தின் கீழ் பல சேவைகளை சேமிப்புடன் எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Black Rs 998 Is The Most Affordable Entry Level Plan Curated By Bharti Airtel In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X