Home
News

கேபிள் டிவிய முடிச்சாச்சு.. இனி ரூ.350-க்கு டிவி சேனல்.. 12 ஓடிடி சந்தா.. ஃபைபர் டேட்டா.. Airtel-க்கு குஷி!

கேபிள் டிவி கஸ்டமர்களே இதுக்கு மாறலாம் போலயே என்று நினைக்கும்படி நம்ப முடியாத சலுகைகள் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ஏர்டெல் பிளாக் திட்டங்களில் (Airtel Black Plans) கிடைக்கிறது. இதில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் பிளாக் திட்டத்திலேயே ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்கள், 12 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. டிடிஎச், ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளை கொண்ட இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.

ஒரே பில்லில் டிடிஎச் மூலம் லைவ் டிவி சேனல்கள் + ஓடிடி சேவை மற்றும் ஃபைபர் இன்டர்நெட் + லேண்ட்லைன் சேவை ஆகியவற்றை ஏர்டெல் பிளாக் திட்டங்கள் கொடுக்கின்றன. தனித்தனியாக பில் கட்டுவதற்கு பதிலாக இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இதில் ரூ.699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிளாக் திட்டம் பட்டையை கிளப்புகிறது.

கேபிள் டிவிய முடிச்சாச்சு.. இனி ரூ.350-க்கு டிவி சேனல்.. 12 ஓடிடி ஆப்!

இந்த திட்டத்தில் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள், ஃபைபர் இன்டர்நெட், ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்கள் மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இதற்கான டிவைஸ்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். ஆனால், ரூ.2,500 கட்டணத்தை அட்வான்ஸ் முறையில் செலுத்தினால் மட்டுமே இலவசமா கொடுக்கப்படும்.

இந்த அட்வான்ஸ் தொகை உங்களது திட்டத்தின் விலையில் இருந்து கழித்து கொள்ளப்படும். ஆகவே, கூடுதலாக கட்டணம் செலுத்தினாலும், இது இலவமான சலுகையை போலத்தான். முதல்முறையாக ஏர்டெல் பிளாக் திட்டத்தை பெறும்போது மட்டுமே அட்வான்ஸ் இருக்கும். இந்த ஏர்டெல் பிளாக் ரூ 699 என்டர்டெயின்மென்ட் திட்டத்தில் கிடைக்கும் முழு சலுகைகளை பார்த்துவிடுவோம்.

ஏர்டெல் பிளாக் ரூ 699 என்டர்டெயின்மென்ட் திட்டம் (Airtel Black Rs 699 Entertainment Plan): இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் ஃபைபர் டேட்டா சலுகை கிடைக்கும். உங்களிடம் லேண்ட்லைன் டிவைஸ் இருந்தால், இலவசமாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) செய்து கொள்ளலாம்.

டிடிஎச் சலுகைகளை பார்க்கையில் ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இது திட்டத்தின் மொத்த விலையில் இருந்து பாதிக்குப்பாதி விலையில் கிடைக்கிறது. இந்த டிவி சேனல்கள் போக ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் டிஸ்னிபிளஸ் ஹாஸ்டார் (Disney + Hotstar) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவுக்கு அடுத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel XStream App) வருகிறது.

இந்த எக்ஸ்ட்ரீம் ஆப் மூலம் சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay) மற்றும் ஈராஸ்நவ் (ErosNow) போன்ற முன்னணி ஆப்களின் அனுகல் கிடைக்கிறது. இதுபோக மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) மற்றும் டிவோ (Divo) ஆப்களும் அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) ஆப்களும் வருகின்றன.

இந்த ஓடிடி ஆப்களின் மதிப்பு ரூ.148 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் ஓடிடி திட்டத்தின் மதிப்பாகும். ஆகவே, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுக்கே இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தில் முக்கால்வாசி கட்டணம் சரியாக இருக்கிறது. மீதமுள்ள கட்டணத்தில் ஃபைபர் டேட்டா மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

இந்த திட்டத்துக்கு ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். ஆகவே, ரூ.699 மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி மற்றும் அட்வான்ஸ் தொகையை செலுத்தினால் மட்டுமே சலுகைகளை பெற முடியும். இது முதல்முறை பெறும்போது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். டிவைஸ்கள் மற்றும் திட்டத்தை பெற்றுவிட்டால், அதற்கு பிறகு மாதம் ரூ.699 விலையில் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Black Rs 699 Plan Offer Rs 350 Worth TV Channels 12 OTT Apps 40Mpbs Data Entertainment Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X