Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel

|

Airtel நிறுவனம் பயனர்களின் தேவை அறிந்து அவ்வப்போது புதுப்புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்வது வழக்கம். பெரும்பாலான திட்டங்கள் அன்லிமிடெட் கால், இன்டெர்நெட் மற்றும் ஓடிடி அணுகலை வழங்குகிறது. அதேபோல் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Disney Plus Hotstar, Amazon Prime வீடியோ ஆகிய தளங்களுக்கான அணுகலை இலவசமாக வழங்குகிறது. அதுகுறித்த விவரத்தை பார்க்கலாம்.

ஏர்டெல் பிளாக் ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் பிளாக் ரீசார்ஜ் திட்டம்

Airtel நிறுவனம் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஏர்டெல் பிளாக் எனும் சந்தாவின் கீழ் வழங்குகிறது. உங்களுக்கும், உங்களது வீட்டாருக்கும், உங்களது வீட்டுக்கும் தேவையான அனைத்து தேவைகளையும் ஒரே திட்டத்தில் பெறலாம். அதுதான் ஏர்டெல் பிளாக் ரீசார்ஜ் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் பயனர்கள் ஃபைபர், டிடிச், லேண்ட்லைன் போன்ற பல இணைப்புகளை பெறலாம். பலரும் இந்த திட்டங்களை பொருட்படுத்துவது இல்லை, ஆனால் இந்த திட்டங்களின் ஏணைய நன்மைகளும் சலுகைகளும் கிடைக்கிறது. ஏர்டெல் பிளாக் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

மொபைல் சேவை, டிடிஎச் மற்றும் ஃபைபர் சேவை

மொபைல் சேவை, டிடிஎச் மற்றும் ஃபைபர் சேவை

ஏர்டெல் பிளாக் திட்டத்தில் ஏர்டெல் மொபைல் சேவை, டிடிஎச் மற்றும் ஃபைபர் சேவைகளை அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் பல பில்களை தனித்தனியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கூடுதலாக பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகிய ஓடிடிகளின் அணுகலையும் இலவசமாக பெறுகின்றனர்.

உங்களிடம் பல ஏர்டெல் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில் அது மொத்தத்தையும் இணைத்து ஏர்டெல் பிளாக் திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். கூடுதலாக இலவச OTT அணுகலும் வழங்கப்படுகிறது. Airtel Black ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிளாக் பிளான்

ரூ.699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிளாக் பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.699 திட்டம் ஆனது ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 40 Mbps வேக இணையம் வழங்கப்படுகிறது.ரூ.300 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான அணுகலை டிடிஎச் மூலம் பெறலாம்.

அதேபோல் டிஸ்னி+ ப்ளஸ் ஹார்ட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச சந்தா அணுகலையும் பெறலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டின் மூலம் சோனிலைவ், Lionsgate உள்ளிட்ட பல ஓடிடி சேனல்களுக்கான அணுகல் கிடைக்கிறது.

ஏர்டெல் பிளாக் ரூ.899 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.899 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.899 பிளானின் பயனர்கள் 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான இணைப்புகளை பெறலாம். கூடுதலாக டிடிஎச் இணைப்பு, போஸ்ட்பெய்ட் சேவையில் 105 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

ரூ.1098 பிளான் விவரம்

ரூ.1098 பிளான் விவரம்

ஏர்டெல் பிளாக் ரூ.1098 ரீசார்ஜ் பிளான் மூலம் பயனர்கள் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளை பெறலாம். வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எம்பிபிஎஸ் வேக இணையம் வழங்கப்படுகிறது. 75 ஜிபி டேட்டா உடன் கூடிய போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகல் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.1099 ரீசார்ஜ் திட்டம்

ரூ.1099 ரீசார்ஜ் திட்டம்

முன்னதாக குறிப்பிட்ட திட்டத்துக்கும் இந்த திட்டத்துக்கும் ரூ.1 மட்டுமே வித்தியாசம். ரூ.1099 திட்டத்தில் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஎச் இணைப்பு நன்மைகளை பெறலாம். 200 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக டிடிஎச் இல் ரூ.350 மதிப்புள்ள சேனலுக்கான சேவை கிடைக்கும். Amazon Prime Video, Disney Plus Hotstar மற்றும் Airtel XStream ஆகியவைக்கான ஓடிடி அணுகலும் இலவசமாக கிடைக்கிறது.

ஏர்டெல் பிளாக் ரூ.1599 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.1599 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.1599 பிளானில் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஎச் என அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

அதேபோல் இதில் Netflix, Amazon Prime Video, Disney Plus Hotstar மற்றும் Airtel XStream ஆகியவற்றுக்கான ஓடிடி அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.1799 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.1799 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிளாக் திட்டம்

ஏர்டெல் பிளாக் ரூ.1799 திட்டத்தில் பயனர்களுக்கு ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள் கிடைக்கிறது. வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 200 எம்பிபிஎஸ் வேக இணையம் ஃபைபரில் வழங்கப்படுகிறது. அதேபோல் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 190ஜிபி இணைய டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக Amazon Prime Video, Disney Plus Hotstar மற்றும் Airtel XStream ஆகியவற்றுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ.2299 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.2299 பிளான்

ஏர்டெல் பிளாக் ரூ.2299 திட்டத்தில் பயனர்கள் லேண்ட்லைன் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகளை பெறலாம். ஃபைபரில் 300 எம்பிபிஎஸ் வேக இணையம் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பில் 240 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Best Recharge Plans with Free Netflix, Disney Plus Hotstar, Amazon Prime Video OTT Subscription

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X