ரூ.1000-க்கு கீழ் அள்ளி தரும் மூன்று Airtel ப்ரீபெயட் திட்டங்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. விட்றாதீங்க..
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் ரூ.1000க்குள் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
அதேபோல்56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிரைம் சந்தா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








