Home
News

பொழச்சுப்பீங்க Airtel.. ரூ.100 விலையில் புது ப்ரீபெய்ட் திட்டம்.. கூட்டம் ஏர்டெல் பக்கம் திரும்புது.. எப்படி?

இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண்மூடித்தனமாக அதிகரித்தன. இதனால், பல லட்சம் வாடிக்கையாளர்கள் டூயல் சிம் பயன்பாட்டாளர்கள் அவர்களின் ஒரு சிம் கார்டை நிராகரிக்க துவங்கினர். அதேபோல், பல லட்சம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிக நன்மை வழங்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாற துவங்கினர். இந்த நிலைமையில், ஏர்டெல் மற்றும் ஜியோ அதிகப்படியான பயனர்களை இழந்துள்ளது.

பொழச்சுப்பீங்க Airtel.. ரூ.100 விலையில் புது ப்ரீபெய்ட் திட்டம்:

இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கான புதிய யுக்தியை தற்போது பாரதி ஏர்டெல் (Bharati Airtel) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் பல சுவாரசியமான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (Airtel prepaid plans) அறிமுகம் செய்தது. அதில் குறிப்பிட்டு கூறும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களுக்காக 100 ரூபாய்க்குள் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (Airtel prepaid plan under Rs 100) அறிமுகம் செய்துள்ளது.

பொழச்சுப்பீங்க Airtel.. ரூ.100 விலையில் புது ப்ரீபெய்ட் திட்டம்..

ஏர்டெல் ரூ. 99 திட்டமாகும் (Airtel Rs 99 plan):

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் நடைமுறைப்படுத்திய விலை ஏற்றத்திற்கு பிறகு, அதன் சந்தாதாரர்களை மீண்டும் பெரும் முயற்சியில் 100 ரூபாய்க்குள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் திட்டம் ஏர்டெல் ரூ. 99 திட்டமாகும் (Airtel Rs 99 plan). இந்த திட்டம் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் வெறும் 2 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மட்டுமே வருகிறது.

இதன் செல்லுபடியாகும் காலம் வெறும் இரண்டு நாள் தான் என்றாலும், இந்த திட்டம் இரண்டு தினங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா நன்மை என்று கூறப்பட்டாலும், இந்த திட்டம் தினசரி 20GB வரையிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தமாக 40GB டேட்டா வரை பயன்படுத்த முடியும். 20GB தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ. 77 பிளான் (Airtel Rs 77 Plan):

தினசரி 20GB டேட்டா என்பது உண்மையில் தாராளமான டேட்டா நன்மையாக பார்க்கப்படுகிறது. இது தவிர இந்த திட்டத்துடன் வேறெந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் எஸ்எம்எஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை என்று எதுவுமே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எந்தவொரு திட்டத்திலும் இந்தத் திட்டத்தைச் சேர்க்கலாம்.

எனவே, உங்கள் எண்ணில் ஏற்கனவே வேறொரு திட்டம் செயல்பாட்டில் இருந்தால், இந்த கூடுதல் சலுகையைத் தேர்வுசெய்யலாம். இண்டர்நெட் பயனர்களை மனதில் வைத்து ஏர்டெல் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. இது தவிர ஏர்டெல் நிறுவனம் 77 ரூபாய் செலவில் மற்றொரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் ஏர்டெல் ரூ. 77 பிளான் (Airtel Rs 77 Plan) என்று ஏர்டெல் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 7 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் மொத்தமாக 5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் 5GB டேட்டா நன்மை முடிந்தவுடன், பயனர்கள் 1MB டேட்டாவிற்கு 50 பைசா என்ற விதத்தில் வசூலிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel best prepaid plan under Rs 100 to recharge now check these two plans now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X