Home
News

365 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. ஏர்டெல்லின் குறைந்த விலை திட்டமே இது தானா?

ஏர்டெல் (Airtel) அதன் பயனர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் எப்போதும், குறைந்த விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களையே வாங்க முயல்கின்றனர். ஆனால், உண்மையில், அதிக நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை தேர்வு செய்வதே லாபம் தரக்கூடியதாகும்.

அதிக செல்லுபடியாகும் திட்டம் என்பது, அதிக வேலிடிட்டியை குறிக்கும் திட்டங்களாகும். ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அட்டகாசமான நன்மைகளை வழங்கும் திட்டங்களை அதிக வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அதிக வேலிடிட்டி என்று நாம் இங்கே குறிப்பிடுவது 365 நாள் வேலிடிட்டியை குறிக்கிறது. 365 நாள் திட்டங்களை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதுமானது.

365 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. Airtel-ன் பெஸ்ட் திட்டம்!

அந்த வருடம் முழுக்க நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கவலையே இல்லாமல் நிம்மதியாக சுற்றித்திரியலாம். ஏர்டெல் நிறுவனம் குறுகிய கால திட்டங்கள் முதல் துவங்கி, நீண்ட கால திட்டங்கள் வரை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. ஏர்டெல்லின் நீண்ட கால திட்டங்கள் குறுகிய கால திட்டங்களை விட மலிவானவை.

எது மலிவானதா? அது ஆயிரத்திற்கு மேல் செல்லுமே என்று நீங்கள் முணுமுணுப்பது எங்கள் காதில் கேட்கிறது. உண்மையை சொல்ல போனால் 365 நாட்களுக்கு உரிய கட்டணத்தை கணக்கிட்டு பார்த்தால், அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் தினசரி விலை கட்டணம் குறைவாகவே இருக்கிறது.

இவற்றில், 365 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதனுடன் கிடைக்கும் டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் பல பாராட்டு நன்மைகளும் இந்த திட்டத்துடன் வருகின்றன. சரி, இப்போது ஏர்டெல்லின் குறைந்த விலை திட்டத்தைப் பற்றி பார்க்கலாம்.

இது நீண்ட கால வேலிடிட்டி யுடன் செல்லுபடியாகும் ஒரு அட்டகாசமான திட்டமாகும். ஏர்டெல்லின் இந்த திட்டம் 365 நாள் வேலிடிட்டி உடன் அதிகபட்ச நன்மையை வழங்குகிறது. ஏர்டெல் அதன் ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களில் மூன்று திட்டங்களை வழங்குகிறது. அவை 365 நாட்கள் வேளிடிட்டியாகும் திட்டங்களாகும். இதில் உள்ள முதல் திட்டம் ரூ 3,599 விலையில் கிடைக்கிறது.

இது நிறுவனத்தின் விலையுயர்ந்த திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து செயல்படுத்தக்கூடிய ரூ.2,999 விலைக்கான திட்டமும் ஏர்டெல்லிடம் உள்ளது.இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தினசரி லிமிட் 2 ஜிபி முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆகிறது.

இதன் மூலம், நீங்கள் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள், இதில் உள்ளூர் மற்றும் எஸ்டிடியின் வரம்பற்ற அழைப்புகள் அடங்கும். இது தவிர, தினமும் 100 இலவச SMS கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சில கூடுதல் பலன்களையும் பெறுவீர்கள், இதில் விங்க் மியூசிக் (Wynk Music) இலவச சந்தாவும் கிடைக்கிறது.

இதில் நீங்கள் வரம்பற்ற இசையை ரசிக்கலாம். இலவச இசையைப் பதிவிறக்கலாம். இதனுடன், அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தாவும் கிடைக்கிறது, இது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த அனைத்து நன்மைகள் தவிர, இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் இலவச Hellotunes நன்மையையும் வழங்கும். இதில் எந்த பாடலையும் ஹெலோ டியூனாக (Hello Tune) ஆக அமைக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இதில் வழங்கப்படுகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் 5ஜி டேட்டா கிடைக்கும் என்பது இல்லை. 5G சேவைகள் கிடைக்கப்பெற்ற பகுதிகளில், இந்த திட்டம் அந்த பகுதிகளுக்கு மட்டுமே வரம்பற்ற 5G வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம், நீண்ட கால வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்கள், 5ஜி வசதியை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Best 365 Days Validity Plan With Daily 2GB Data and Unlimited 5G Access
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X