Home
News

TRAI விதிகளின்படி புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்.. ரூ.185 முதல்.. வாய்ஸ் கால்கள்.. SMS.. வேலிடிட்டி?

TRAI-யின் புதிய விதிமுறைகளின்படி, குறைந்த வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் மற்றும் SMS மட்டும் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை முதலில் அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். சில வாரங்களுக்கு முன்பு தான் குறைந்த விலையில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என டிராய் அமைப்பு டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

தற்போது டிராய் அமைப்பு உத்தரவின்படி, ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டங்களில் மொபைல் டேட்டா வசதி கிடையாது. அழைப்புகள் மற்றும் SMS வசதிகள் மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

TRAI விதிகளின்படி புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்..

ஏர்டெல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 185 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.

ஏர்டெல் ரூ.203 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 203 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.

ஏர்டெல் ரூ.206 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 206 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.

வாய்ஸ்கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஒரு மாதம் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த புதிய ஏர்டெல் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஒருவேளை டேட்டா, வாயஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி நன்மையை எதிர்பார்க்கும் பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

TRAI விதிகளின்படி புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்..

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 18-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா இதில் கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Becomes First Telecom Operator to Roll Out Voice-Only Plans Under New TRAI Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X