இந்த ஆகஸ்டில் Airtel கஸ்டமர்களுக்கு கிடைக்கும் பேஸிக் என்ட்ரி லெவல் பிளான்கள்!
இந்தியாவின் 2வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel), கடந்த ஜூலை மாதம் முதல் திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை வழங்கி வருகிறது. இந்த திருத்தத்தின் வழியாக ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ஆகிய 2 வாடிக்கையாளர்களுமே என்ட்ரி-லெவல் திட்டங்களுக்கு கூட, அதாவது ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பிரிவுகளில் கிடைக்கும் மிகவும் மலிவான அடிப்படை திட்டங்களுக்கு கூட அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியாக ஆகஸ்ட் 2024 நிலவரப்படி ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிரிவுகளில் வழங்கும் என்ட்ரி -லெவல் திட்டங்களின் விவரங்கள் இதோ:
ப்ரீபெய்ட் பிரிவில் ஏர்டெல்லின் நுழைவு நிலை திட்டம்: நீங்கள் ஒரு ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், குறைந்தபட்ச தொகையை செலவழிக்க விரும்பினால், ஏர்டெல் வழங்கும் என்ட்ரி-லெவல் ட்ரூலி அன்லிமிடெட் திட்டத்திற்கு (Entry-level Truly Unlimited plan) இப்போது நீங்கள் ரூ.199 செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். டேட்டா ஒதுக்கீட்டை தாண்டிய டேட்டா பயன்படுத்தினால் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது;
ரூ.199 திட்டத்தின் மற்ற கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இலவச விங்க் மியூசிக் சந்தா மற்றும் விங்க்கில் இருந்து இலவச ஹலோ ட்யூன்ஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும், ஏர்டெல் நிறுவனம் இதை ஏர்டெல் ரிவார்டு பலன்கள் என்று அழைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி மாதத்திற்கு ஒரு ட்யூனை செட் செய்ய அனுமதிக்கிறது.
போஸ்ட்பெயிட் பிரிவில் ஏர்டெல்லின் நுழைவு நிலை திட்டம்: ஏர்டெல் வழங்கும் பேஸிக் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.449 ஆகும். இந்த திட்டம் அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங்), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 200 ஜிபி வரையிலான ரோல்-ஓவருடன் 50ஜிபி மாதாந்திர டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 5G ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால், 5ஜி கவரேஜ் உள்ள பகுதிகளில் இருந்தால் இலவச வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் அனுபவிக்க முடியும். ஏர்டெல் ரிவார்ட்ஸ் பலன்களை பொறுத்தவரை, கூடுதல் கட்டணமின்றி 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் கூடுதல் ரூ.349 க்கு பேமிலி ஆட்-ஆன் களை சேர்க்கலாம். இதற்காக உங்கள் வட்டத்தை பொறுத்து ரூ.250 அல்லது ரூ.300 என்கிற ஆக்டிவேஷன் கட்டணங்கள் விதிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் சேவை பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை மாதத்திற்கு ரூ.349 க்கு பெறலாம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
ஆக இந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில், பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களை தேடும் வாடிக்கையாளர்கல் குறைந்தது ரூ.199 அல்லது ரூ.449 செலவு செய்ய வேண்டி இருக்கும். ரூ.199 ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான பேஸிக் ரீசார்ஜ் ஆகும். ஏர்டெல்லிலிருந்து போஸ்ட்பெய்டு சேவைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கான பேஸிக் திட்டம் ரூ.449 இல் தொடங்குகிறது.
நீங்கள் அதிக டேட்டாவை பயன்படுத்தாமல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளை தேடும் பயனர் என்றால், கூடவே மாதாந்திர ரீசார்ஜ்களை விரும்பினால் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.449 திட்டமும் அப்படித்தான். ஓடிடி போன்ற கூடுதல் நன்மைகளை எதிர்பார்க்காமல், மிகவும் மலிவான விலைக்கு போஸ்ட்பெய்ட் கனெக்ஷனை தக்கவைத்து கொள்ள விரும்பினால், எந்த சந்தேகமும் இல்லாமல் ரூ.449 ஐ ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








