ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.! ஆட்டோபே சர்வீஸ் வசதி.!

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் இந்நிறுவனம் ஆட்டோபே சர்வீஸ் (Autopay Service)
எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு

அதாவது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அவரது தற்போதைய திட்டம் அதன் காலாவதி தேதிக்கு அருகில் வரும்போது புதிய திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வது தான். மேலும் குறுகிய கால செல்லுபடியுடன்ப்ரீபெய்ட் திட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்கு ஒரு நிலையான வலி என்றே கூறலாம்.

 பிரச்சனைக்கான நிவாரணியாக

குறிப்பாக இந்த பிரச்சனைக்கான நிவாரணியாக ஆட்டோபே சர்வீஸ் வசதி களமிறங்கி உள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த நன்மை ஆனது இப்போது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

மூன்று கேமரா, 5000 mAh பேட்டரியோடு அறிமுகமான ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!மூன்று கேமரா, 5000 mAh பேட்டரியோடு அறிமுகமான ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!

ஆட்டோபே சேவை ஆனது வாடிக்கையாளர்களு

சுருக்கமாக ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்டோபே சேவை ஆனது வாடிக்கையாளர்களுக்கான அடுத்த ரீசார்ஜிற்கு பொறுப்பேற்று கொள்ளும். அதாவது உங்களது திட்டத்தின் வேலிடிட்டி முடியும் போது வாடிக்கையாளர் மீண்டும் ரீசார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதை ஆட்டோபே சேவை உறுதி செய்கிறது.

சியோமியின் 82-இன்ச் 8K OLED ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!சியோமியின் 82-இன்ச் 8K OLED ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!

இதை சாத்தியப்படுத்த வாடிக்கையாளர்கள்

ஆனால் இதை சாத்தியப்படுத்த வாடிக்கையாளர்கள் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட-டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளைச் சேர்த்து எதிர்கால ரீசார்ஜிற்கான கட்டணங்களுக்கான ஊடகங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், உங்களது தற்போதைய திட்டத்தின் காலாவதி தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஏர்டெல் ஆட்டோபே சேவை உங்கள் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்து,உங்கள் வங்கி கணக்கிலிருந்து பொருத்தமான தொகையை கழிக்கும்.

பரிவர்த்தனை குறித்து

மேலும் இந்த பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக குறிப்பிட்ட ரீசார்ஜ் சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படும். அதேசமயம் குறிப்பிட்ட திட்டம் காலாவதியாகும் மூன்று நாட்களுக்கு முன்னர் புதிய பேக் ரீசார்ஜ் செய்யப்பட்டாலும், மீதமுள்ள வேலிடிட்டியல் எந்த விதமான கழிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீசார்ஜ் திட்டத்தின்

அதாவது உங்களின் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் அனைத்து நன்மைகளும் தற்போதைய அல்லது பழைய திட்டம் காலாவதியான பின்னரே ஆக்டிவேட் செய்யப்படும். இந்த வசதியின் மூலம் பல்வேறு தளங்களில் ரீசார்ஜ் செய்வதை தவிர்க்க முடியும். இந்த ஆட்டோபே வசதியை தேவை என்றால் பயன்படுத்தலாம், இல்லையென்றால் நீங்கள் எப்போது வேண்டுமானலூம் இதை அகற்றலாம்.

வாடிக்கையாளர்கள் ஏர்டெல்

இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ஆப்பில் உள்ள அக்கவுண்டிற்கு சென்று சேவைகள் கட்டணசர்வீஸ் பேமண்ட்செட்டிங்ஸ்-இல் இருந்து டிசேபிள் ஆட்டோபே என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும் இதை சாத்தியப்படுத்த வாடிக்கையாளர் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்,அதையும் இதே வழிமுறையின் கீழ் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Autopay Service Will Help Prepaid Users With their Next Recharge And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X