24 மணிநேரத்தில் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் ரூ. 6000 சலுகை கிடைக்காது.. ஏர்டெல் அறிவிப்பு..

|

ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய கேஷ்பேக் நன்மையை அறிவித்துள்ளது. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது ரூ. 6,000 கேஷ்பேக் அறிவித்துள்ளது. ரூ. 12,000 வரை விலை கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களால் கேஷ்பேக் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் இதற்காக 150-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் உடன் இந்த நன்மை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெறப் பயனர்கள் உடனே 24 மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்

24 மணி நேரத்திற்குள் உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த சலுகைக்குத் தகுதி வாய்ந்த பயனர்கள் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் ரூ. 249 அல்லது அதற்கும் மேலான திட்டங்களை ரீசார்ஜ் செய்து அவர்களின் சலுகை தக்கவைத்துக்கொள்ளுமாறு தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியில் மும்முரமாகக் களமிறங்கி ஏர்டெல் நிறுவனம், பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

ரூ. 6,000 மதிப்புள்ள நன்மையை வழங்கும் ஏர்டெல்

ரூ. 6,000 மதிப்புள்ள நன்மையை வழங்கும் ஏர்டெல்

இந்த சலுகையில் படு, ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் பயனர்களுக்கு ரூ. 12,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ. 6,000 மதிப்புள்ள நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்களுக்கு இந்த நன்மையை வழங்குவதற்காக முன்னணி பிராண்டுகளின் 150-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர் தனது தரப்பிலிருந்து சந்திக்க வேண்டிய சில நிபந்தனைகளும் இதில் உள்ளது என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.

நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..

36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய மறக்காதீர்கள்

36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய மறக்காதீர்கள்

இந்த ரூ. 6000 நன்மை கிடைக்கும் சலுகை பொருந்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர் ரூ .249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நிறுவனத்தில் ப்ரீபெய்ட் பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) வரை தொடர்ந்து நடக்க வேண்டும். பாரதி ஏர்டெல் 3 ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக ரூ. 6,000 நன்மையை உங்களுக்கு வழங்குகிறது. பாரதி ஏர்டெல் 36 மாத காலப் பகுதியில் சுமார் 6,000 ரூபாய் கேஷ்பேக் நன்மையை இரண்டு பகுதிகளாக வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதல் நன்மைகளும் உள்ளது.. ஜாக்பாட் தான்..

கூடுதல் நன்மைகளும் உள்ளது.. ஜாக்பாட் தான்..

குறிப்பாகப் பயனர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் ரூ. 249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ப்ரீபெய்ட் பேக் மூலம் 18 மாதங்கள் தொடர்ச்சியான ரீசார்ஜ்களை முடிக்கும்போது ரூ .2,000 முதல் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும், ரூ. 49,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்யும் காலத்தை முடித்தவுடன் பயனர்களுக்கு ரூ. 4,000 என்ற எஞ்சிய தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, ஏர்டெல் ரூ. 4,800 மதிப்புள்ள இலவச டிஸ்பிளே மாற்று நன்மையையும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.

ஜியோவையே திணறடித்த Vi திட்டம்.. நன்மையை கேட்டா நீங்களே யோசிப்பிங்க.. Vi சிம் வாங்கலாமோ?ஜியோவையே திணறடித்த Vi திட்டம்.. நன்மையை கேட்டா நீங்களே யோசிப்பிங்க.. Vi சிம் வாங்கலாமோ?

இலவச ஏர்டெல் தேங்க்ஸ் சலுகை விபரங்கள்

இலவச ஏர்டெல் தேங்க்ஸ் சலுகை விபரங்கள்

ரூ. 12,000-க்கு கீழ் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட ஸ்மார்ட்போனுக்கு டிஸ்பிளேவை பெறுவதற்கான தோராயமான செலவு ரூ. 4,800 ஆகும். பாரதி ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் பேக்குகளுடன், பயனர்களுக்கு இலவச ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளைப் பெற உரிமை உண்டு, இதில் இலவச வின்க் மியூசிக் சந்தா, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு ஒரு மாதத்திற்கான இலவச சோதனை மற்றும் பாஸ்ட் டேக் கேஷ் பேக் நன்மை போன்ற பல இலவச நன்மைகள் கிடைக்கிறது.

12 நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகையில் கிடைக்கிறது

12 நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகையில் கிடைக்கிறது

ஸ்மார்ட்போன்களில் கேஷ்பேக் நன்மையை வழங்க, பாரதி ஏர்டெல் இந்தியாவின் சில முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் ஏர்டெல் கூட்டுச் சேர்ந்துள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சலுகை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை ஊக்குவிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த பட்டியலில் சாம்சங், சியோமி, விவோ, ஒப்போ, ரியல்மி, நோக்கியா, ஐடெல், லாவா, இன்பினிக்ஸ், டெக்னோ, லெனோவா மற்றும் மோட்டோரோலா போன்ற முன்னணி நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

கம்மி விலையில் பெஸ்டானா போன் வாங்க குறுகிய கால வாய்ப்பு.. ரெட்மி 9 சீரிஸ் போன்கள்..கம்மி விலையில் பெஸ்டானா போன் வாங்க குறுகிய கால வாய்ப்பு.. ரெட்மி 9 சீரிஸ் போன்கள்..

24 மணி நேரம் மட்டுமே மிஞ்சியுள்ளது

24 மணி நேரம் மட்டுமே மிஞ்சியுள்ளது

இந்த 12 பிராண்ட்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமான பிராண்டை தேர்வு செய்து, அதிலிருந்து உங்களுக்குப் பிடித்த புதிய பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கி பயன்பெறுங்கள். மேலும் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான செய்திகளுக்கு எங்களின் கிஸ்பாட் பக்கத்தைப் பார்வையிடுங்கள். ஏர்டெல் அறிவித்துள்ள படி, ரீசார்ஜ் செய்ய வேண்டிய கால அவகாசமாக நிறுவனம் இப்போது 24 மணி நேரம் மட்டுமே மிஞ்சியுள்ளது என்பதை தனது பயனர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இதை செய்ய மறந்தால் என்னவாகும்?

இதை செய்ய மறந்தால் என்னவாகும்?

இதைச் செய்ய மறக்கும் பயனர்களுக்கு வழங்கப்படும் ரூ. 6000 மதிப்பிலான நன்மை அடுத்த 3 வருடங்களுக்குக் கிடைக்காது. காரணம், ஏர்டெல் அதன் விதிமுறையில் முன்பே தெரிவித்தது போல், இது ஒரு தொடர்ச்சியான ரீசார்ஜ் முறை என்பதனால் நீங்கள் சரியான நேரத்தில் தொடர்ச்சி துண்டிக்கப்படாமல் ரீசார்ஜ் செய்வது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் அடுத்த 3 வருடங்களுக்கும் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியது கட்டாயம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Asks to Recharge In 24 Hours Or Lose Rs 6000 Worth Smartphone Offer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X