Home
News

2026 புத்தாண்டு: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது.. தினமும் 2.5GB டேட்டா, வாய்ஸ் கால்கள்!

ஒரே ரீசார்ஜ் மூலம் ஆண்டு முழுவதும் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் ஒரே ரீசார்ஜ் மூலம் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களைத் தேடும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 புத்தாண்டு: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது

அதுவும் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏர்டெல் திட்டம் 1 வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த ஜியோஹாட்ஸ்டார் OTT நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஒருவேளை வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.1849 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

2026 புத்தாண்டு: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது

அதாவது ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்த திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன.

குறிப்பாக மேலே உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2026 முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Annual Prepaid Recharge Plans for 2026: check detail here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X