Home
News

புத்தாண்டு 2025: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது.. தினமும் 2.5GB டேட்டா, வாய்ஸ் கால்கள்!

2025 புத்தாண்டு நெருங்கிவிட்ட நிலையில், ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்து, அண்டு முழுவதும் கவலையின்றி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஏர்டெல் (Airtel) பயனர்கள் ரூ.1999, ரூ.3599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்களை தவறவிடக்கூடாது. இப்போது இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் உள்ளது. எனவே இந்த திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

புத்தாண்டு 2025: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது!

குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதாவது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

புத்தாண்டு 2025: ஒரே Airtel ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1999 prepaid plan) மொத்தமாக 24ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். குறிப்பாக அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

photo credit: pngtree

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Annual Prepaid Recharge Plans for 2025: check detail here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X